காளைகள் துன்புறுத்தப்பட்டதற்கான வீடியோ மற்றும் புகைப்படம் ஆதாரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஜல்லிக்கட்டு போட்டியை நிரந்தரமாக தடைவிதிக்க வலியுறுத்த அர்எஸ்எஸ் அமைப்பினர் நிறைந்து இருக்கும் பீட்டா அமைப்பு முடிவு செய்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் நிர்வாகி நிதின் சர்மா, கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் 4 மாவட்டங்களில் 20 இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை கண்காணித்து ஆதாரங்களை திரட்டியதாக கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற வீரர்கள், காளைகளை துன்புறுத்தியதை நேரில் கண்டு வீடியோவாக பதிவு செய்திருப்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் தடை விதித்ததையடுத்து தமிழகத்தில் சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை. தடையை எதிர்த்து 2017-ம் ஆண்டு ஜனவரியில் மாணவர்கள் போராட்டம் வெடித்ததையடுத்து தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசர சட்டம் பிறப்பித்தது.
இதனையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கக்கோரி பீட்டா மற்றும் விலங்குகள் நல அமைப்பினர் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வரும் போது மேற்கொண்ட ஆதாரங்களை தாக்கல் செய்ய பீட்டா தீர்மானித்திருக்கிறது.
முன்னதாக ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ராதா ஜல்லிக்கட்டு மாணவர்கள் லட்சக்கணக்கில் கூடிய கூட்டதை செக்ஸ் என்றால் கூட மக்கள் நிறைய பேர் கூடுவார்கள் என்று கூறியதும் .,அர்எஸ்எஸ் முக்கிய புள்ளி மற்றும் பாஜக எம்பியுமான ராஜிவ் கொலை வழக்கில் ஜெயின் கமிஷன் தண்டிககபட்ட http://tamil.splco.me/kalasuvadu.html சுப்ரமணியசாமி தமிழ்ர்களை பொறுக்கிகள் என்று கூறியதும் குறிப்பிடதக்கது...