தமிழக அரசால், மானிய விலையில் வழங்கப்படும், ஸ்கூட்டர் களை மூன்று ஆண்டுளுக்கு விற்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. அதற்கேற்ற வகையில் ஆர்.சி. புத்தகத்தில், 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் மானியத்தில், தமிழக அரசால், ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், எந்த நிறுவன வாகனத்தையும், அரசின் மானியத்தில் பெறலாம். அது, இந்தாண்டு தயாரிப்பாகவும் 125 சி.சி., திறனுள்ள, கியர் இல்லாத வாகனமாகவும் இருக்க வேண்டும்.
இந்த ஸ்கூட்டரை மூன்றாண்டுகளுக்கு விற்க முடியாது என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின், கிராமப்புற வாழ்வாதார திட்டம் மற்றும் மானிய விலை ஸ்கூட்டர் திட்ட இயக்குனர் அனுமதி இல்லாமல், மூன்றாண்டுகளுக்கு, வாகன உரிமையை மாற்ற முடியாது.
இதை, உறுதிப்படுத்தும் வகையில், வாகன உரிமையாளருக்கு வழங்கப்படும்,ஆர்.சி., புத்தகத்தில், 'இருசக்கர வாகன மானிய திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த வாகனத்தை, மூன்றாண்டுகளுக்கு விற்கவோ, உரிமம் மாற்றமோ செய்யக்கூடாது' என, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.
மானிய திட்டஙகளை எதிர்க்கும் பிரதமர் மோடி மானிய திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த வாகனத்தை தமிழ் நாட்டுக்கு வந்து திறந்து வைத்தார் என்பதும் குறிப்பிடதக்கது.
பேருக்கு அன்று மட்டும் கொடுத்து விட்டு அதிகாரிகள் எந்த விளக்கமும் கொடுப்பதில்லை என்று விண்ணப்பித்த பெண்கள் புலம்புகின்றனர். மேலும் அதிமுகவின் தினகரன் கோஸ்டிஒதுக்கிடு வழங்குவதிலும் இதில் ஊழல் நடந்து இருப்பதாக தெரிவித்து உள்ளதும் குறிப்பிடதக்கது...
இந்த நிலையில் இதுவும் அம்மா உணவகம் போல புஸ்ஸ் திட்டம் தானா என்று சமூக வலைதலைத்திலே அதிமுகவை பதிவர்கள் கேள்வி கேட்டும் வருகின்றனர்.