சிரியா அகதிகளில் 10சதவிகிதம் பேர் பாதுகாப்பான முறையில் ஐரோப்பாவில் தஞ்சம் சேர்ந்தனர். மேலும் 6.1 மில்லியன் மக்கள் தங்கள் நாட்டினுள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர்.
2018இல், சிரியாவினுள் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் 13.1மில்லியன் மக்களுக்கு உதவ 3.5பில்லியன் தொகை தேவைப்படும் என ஐ.நா கணக்கிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 70% மக்கள் மிகவும் கொடுமையான வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். விலைவாசி மற்றும் உணவுத்தட்டுபாட்டால் ஆறு மில்லியன் மக்கள் உணவில்லாமல் தவிக்கின்றனர். சில பகுதிகளில் உள்ள மக்கள் தங்களில் 15 முதல் 20 சதவிகித வருவாயை குடிநீரிற்காக செலவிடுகிறார்கள்.
மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு உதவிகள் சென்று சேர முடியாத நிலையை போரில் ஈடுபட்டுள்ள குழுக்கள் உருவாக்கியுள்ளன. சுமார் 2.98 மில்லியன் மக்கள் உதவிகள் சென்றடைய முடியாத பகுதிகளில் உள்ளனர்.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு கூட்டா நிலப்பரப்பின் 10 சதவீத பகுதிகளை மீண்டும் சிரிய அரசு கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
சனிக்கிழமை தாக்குதல் தீவிரமடைந்ததாக கூறியுள்ளது இப்பிரச்சனையை கண்காணித்து வரும் இங்கிலாந்தை சேர்ந்த சிரிய மனித உரிமை ஆய்வு மையம்.
டமாஸ்கஸ் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் செல் தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளனர். கிழக்கு கூட்டா பகுதியில் மட்டும் ஏறத்தாழ 393,000 மக்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். உணவு மற்றும் மருத்துவ இருப்புகள் விரைந்து குறைந்து வருகின்றன. தொடர் சண்டையின் காரணமாக உதவி பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்களும் உள்செல்ல முடியவில்லை.
சிரியாவின் பெரிய நகரங்களை அரசு தன்வசப்படுத்தினாலும், பெரும்பான்மையான இடங்கள் இன்னும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.
இட்லிப் மாகாணத்தின் வடமேற்கு பகுதியே, இன்னும் எதிர் அணியினரின் திடமான பகுதியாக உள்ளது. அவ்விடத்தில், 2.65 மில்லியன் மக்கள் உள்ளனர். இதில் 1.2மில்லியன் மக்கள் வேறு பக்கங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள்.
விரிவாக்க மண்டலங்களில் ஒன்றாக இருந்தாலும் இட்லிப் தற்போது அரசின் முக்கிய தாக்குதல் இடமாக உள்ளது. அந்த இடத்தில் உள்ள ஹயத் தஹ்ரிர் அல்-ஷாம் ஜிகாதிகளை குறிவைப்பதாக அரசு தெரிவிக்கிறது.
கிழக்கு கூட்டாவில், கிளர்ச்சியாளர்களின் வசமுள்ள கடைசி பெரிய பகுதியும், மற்றொரு விரிவாக்க மண்டலத்தை நோக்கி அரசின் தாக்குதல்கள் உள்ளன. கடந்த 2013 முதல், இந்த இடத்தில் 3.93லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.
தொடர் தாக்குதல்களை சந்தித்துவரும் இந்த மக்கள், உணவு மற்றும் மருந்து தட்டுப்பாட்டையும் எதிர்கொண்டு வருகின்றனர். அலெப்போவின் வடக்கு மாகாணங்கள், ஹாம்ஸின் மத்திய மாகாணம், டேரா மற்றும் குனேட்ரா பகுதிகளின் தென் மாகாணங்கள் இன்னும் கிளர்ச்சியாளர்களின் வசமுள்ளன.
2014ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடந்த ஜெனிவா 2 என்ற அமைதி பேச்சுவார்த்தைக்கான மத்தியஸ்தராக ஐ.நா செயல்பட்டது. ஒன்பது குழுக்களாக நடந்த இந்த பேச்சுவார்த்தையின் கடைசி சுற்று கடந்த ஜனவரி மாதம் நடந்தது.
அரசியலமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்களை கொண்டுவரவும், சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்தவும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. சிறிய அளவிலான முன்னேற்றமும் ஏற்பட்டது.
போர்க்களத்தில் பல இடங்களில் பின்வாங்கியபோதும், பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தொடர்ந்து அதிபர் பதவி விலக வேண்டும் என்று கேட்கப்பட்டு வந்ததால், இந்த பேச்சுவார்த்தைகளின் மீது ஆர்வமில்லாதவராக இருந்தார் அதிபர் அசாத்.
மேற்கத்திய சக்திகள், இந்த பணிகளுக்கு இடையே, ரகசிய முறையில் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தனது கூட்டாளி அணிகள் தொடர்ந்து நீடித்து இருக்க வேண்டும் என்று இந்த நடவடிக்கைகளில் அது ஈடுபட்டதாக கூறுகின்றன.
கடந்த ஜனவரியில் ரஷ்யாவில் சர்வதேச பேச்சுவார்த்தைக்கான மாநாடு நடந்தபோதிலும், பெரும்பாலான அரசியல் எதிர்கட்சிகளும், ஆயுதமேந்திய குழுக்களும் அதில் பங்கேற்க மறுத்துவிட்டனர்.
அஸ்தானாவில் ரஷ்யா, இரான் மற்றும் துருக்கிக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முடிவாகவே இந்த மாநாடு அமைக்கப்பட்டது.
கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம், இந்த நாடுகள், சிரியாவில் நான்கு விரிவாக்க இடங்களை அமைக்க ஒப்புக்கொண்டன. ஆரம்பத்தில் தாக்குதல் குறைந்திருந்தாலும், மே மாதத்திற்கு பிறகு அதில் இரண்டு இடங்களில் அரசு தாக்குதல் நடத்த தொடங்கியது.
சிரியாவில் நடக்கும் மோதலில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா பங்கு என்ன...