அதிபருக்கு ஆதரவாக செயல்படும் ரஷ்ய அரசு, 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், சிரியா அரசை `நிலையாக` வைப்பதற்காக விமான தாக்குதலுக்கான பிரசாரத்தை தொடங்கியது.
`பயங்கரவாதிகள்` மட்டுமே குறிவைக்கப்படுவார்கள் என்று ரஷ்யா தெரிவித்தபோதிலும், அதன் தொடர் தாக்குதல் என்பது, மேற்கத்தியர்களின் ஆதரவை பெற்றிருந்த கிளர்ச்சியாளர்கள் மீதும், பொதுமக்கள் வசித்த இடங்களிலும் நடந்ததாக செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
ரஷ்யாவின் இந்த தலையீடு என்பது, போரின் திசையை அதிபருக்கு ஆதரவாக மாற்றியது. 2016ஆம் ஆண்டின் பின்னாட்களில், கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த கிழக்கு அலெப்போவில் ரஷ்ய விமானப்படையின் தாக்குதல் அதிகமாக இருந்தது.
பிறகு 2017ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில், ரஷ்யாவின் சிறப்பு படையினர் மற்றும் பிற குழுக்களின் இணைந்த தொடர் தாக்குதல், டேர் அல்-சோர் நகரில் இருந்த ஐ.எஸ் குழுவின் உறுதியான கட்டுப்பாட்டை உடைத்தது.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ரஷ்ய படைகளின் சில பிரிவை பின்வாங்கிக்கொள்ளுமாறு உத்தரவிட்டார். ஆனால், சிரியா முழுவதும் அவர்கள் தொடர்ந்து விமானப்படை மூலம் தாக்குதல்கள் நடத்தினர்.
அதிபர் அசாத் தான் அனைத்து அத்துமீறல்களுக்கும் காரணம் என்று கூறும் அமெரிக்கா, எதிரணியினருக்கு ஆதரவளிக்கிறது. ஒரு காலத்தில், `மிதமான` கிளர்ச்சியாளர்களுக்கு ராணுவ உதவிகளும் செய்துள்ளது.
2014ஆம் ஆண்டு செப்டம்பர் முதல், ஐ.எஸ் படைகள் மீது வான்வழித்தாக்குதல் நடத்தியுள்ள அமெரிக்கா, சில சூழல்களில் அரசுக்கு ஆதரவான படைகளை மட்டுமே குறி வைத்தும் தாக்குதல் நடத்தியுள்ளது.
சிரியாவில் ஏன் போர் நடக்கிறது?படத்தின் காப்புரிமை AFP ஹான் ஷேஹூன் நகரில் கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதலுக்கு பின்னணியாக இருந்தது என்று கூறப்பட்ட ஒரு விமான தளத்தின்மீது தாக்குதல் நடத்துமாறு 2017ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.
அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக சிரியாவின் உள்ளே இருக்கும் குழுதான் எஸ்.டி.எஃப் எனப்படும், சிரியா ஜனநாயகப்படை. இது குர்து மற்றும் அரபு கிளர்ச்சியாளர்களின் கூட்டுக்குழு ஆகும். கடந்த 2015ஆம் ஆண்டு முதல், சிரியாவில் பல இடங்களை கைப்பற்றியிருந்த ஐ.எஸ் குழுவை அங்கிருந்து வெளியேற்றிய குழு இதுவாகும்.
கடந்த ஜனவரி மாதம், பாதுகாப்பு, இரானிய படைகளின் ஊடுருவலை சமாளித்தல், உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர உதவுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக எஸ்.டி.எஃப் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில், அமெரிக்க படைகள் இருக்கும் என்று அந்நாடு அறிவித்தது.
இப்படி இரு வல்லரசு நாடும் தனது பிடியில் சிரியாவை வைத்து கொள்ளும் முயற்ச்சியில் இது வரையில் சிரியாயில் வசித்த மககள் அகதிகளாக 10சதவிகிதம் பேர் பாதுகாப்பான முறையில் ஐரோப்பாவில் தஞ்சம் சேர்ந்தனர். மேலும் 6.1 மில்லியன் மக்கள் தங்கள் நாட்டினுள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர்.