தற்போது சிரியாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை', 'ஊடகங்கள் சிரியாவில் பாதிக்கப்படுபவர்களை புறக்கணிக்கின்றன' , 'சிரியாவில் மிகப்பெருமளவிலான கொலை நடந்திருக்கிறது' போன்ற தலைப்புகளுடன் சமூக ஊடகங்களில் சில புகைப்படங்கள் பரவிவருகின்றன. இவை உண்மைதானா...
மே 27, 2003ஆம் ஆண்டில், இராக்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது மார்கோ டி லாரோ என்ற புகைப்படக் கலைஞர்தான் இந்த புகைப்படத்தை எடுத்தவர். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு பள்ளியில், வெகுஜன கல்லறைகளில் காணப்பட்ட உடல்களை அடையாளம் காட்டுவதற்காக வைத்திருந்தனர். அல் முசய்யப் நகரில் ஒரு பாலைவனத்தில் இவை காணப்பட்டன என்று புகைப்படக்காரர் குறிப்பிட்டார்.
தெற்கு பாக்தாத்தில் சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் இராக்கியர்கள் காணாமல் போனதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1991 வளைகுடா போரைத் தொடர்ந்து ஷியா முஸ்லீம்களை சதாம் அரசு நசுக்கித்தள்ளியபோது தங்களது குடும்பத்தில் காணாமல் போன அண்ணன், தங்கை, அப்பா, அம்மா, குழந்தைகள் ஆகியோரை தேடிக் கொண்டிருந்தவர்கள் இந்த எலும்புகூடு உடல்களில் தங்களின் சொந்தங்களை அடையாளம் காணமுடியுமா எனவும் தேடிப் பார்த்தனர்.
ஏப்ரல் 2014-இல் இப்புகைப்படம் வெளியிடப்பட்டது. சிரியாவில் பஷர் அல் அசாத்தின் அரசுக்கு எதிரான ஒரு கிளர்ச்சிக்குழுவான சுதந்திர சிரியா ராணுவத்துக்கு ஆதரவான ஒரு நபர் இந்த புகைப்படத்தை பகிர்ந்ததாக டெய்லி மெயில் ஏப்ரல் 21,2014 அன்று செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் இந்த புகைப்படம் உண்மையானதாகவோ அல்லது பிரசார யுக்திக்காக பயன்படுத்தப்பட்டதாகவோ இருக்கலாம் என அந்த தளம் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இது 2016 நவம்பரில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும். சிரியாவில் அலெப்போ நகரில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அமீர் அல்ஹால்பே என்ற புகைப்படவியலாளர் இதனை எடுத்தாக நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது 2016-இல் கட்டட இடிபாட்டில் சிக்கியுள்ள ஒரு குழந்தையை மீட்கும் புகைப்படம் இது.
கண்ணால் கண்பதும் பொய் ,காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்பது தமிழ் பழமொழியாகும்.
Input feed : Credits #BBC