அதிமுகவின் பல்வேறு கட்சி அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ‘புரட்சித் தலைவி அம்மா பேரவை’க்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Special Correspondent

அதன்படி, துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் பி. ரவீந்திரநாத்துக்கு புரட்சி தலைவி அம்மா பேரவையின் தேனி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதுபோலவே மற்றொரு அமைச்சரான ஜெயக்குமாரின் மகனும், தென் சென்னை தொகுதி அதிமுக எம்.பி.யுமான ஜெயவர்த்தனுக்கு புரட்சித் தலைவி அம்மா பேரவையின் இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பி.ரவீந்திரநாத்குமார் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஆவார். இவர் முன்னதாக தேனி மாவட்ட அ.தி.மு.க. இளைஞர்கள், இளம் பெண்கள் பாசறை செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் எம்.பி., மறைந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி மகன் கே.ஏ.கே.முகில் ஆகியோருக்கு ஜெயலலிதா பேரவையின் மாநில இணைச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களின் மகன்கள் 3 பேருக்கு ஜெயலலிதா பேரவையில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள இதுமட்டுமின்றி, வேலூர், திருச்சி உட்பட பல மாவட்டங்களுக்கான அம்மா பேரவை நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் பல வாரிசுகளுக்கு பதவிகள் கிடைத்து ஊள்ளதாம்.

இதற்கான ஒப்புதலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வெளியிட்டுள்ளனர். இவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

முதல்வர் எடப்பாடி குடும்பத்தில் தங்கமணி வீரமணி உள்ளிட்ட மூன்று பேர் மந்திரிகள் என்ற நிலையில் இப்படி தலைவர்கள் அவர்களே அவர்கள் பிள்ளைகளுக்கு கட்சி பதவி கொடுத்து வருவதால் அதிமுக கடைநிலை தொண்டர்கள் வேதனை அடைவதாக தெரிவித்து வருவதும் குறிப்பிடதக்கது.