கடந்த மே மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.94 ஆயிரத்து 16 கோடி கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Special Correspondent

இதில் மத்திய அரசின் வரி வருவாய் ரூ.15 ஆயிரத்து 866 கோடியும், மாநில அரசின் வரி வருவாய் ரூ.21 ஆயிரத்து 691 கோடியும், மாநிலங்களுக்கு இடையேயான வரி வருவாய் ரூ.49 ஆயிரத்து 120 கோடியும், செஸ் வருவாய் ரூ.7 ஆயிரத்து 339 கோடியும் அடங்கும்.

இது கடந்த மாதத்தை விட அதிகமாகும் ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.89 ஆயிரத்து 885 கோடியாக இருந்தது.

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) கடந்த ஆண்டு ஜூலை 1–ந் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்தியது. அன்று முதல் மார்ச் 2018–ம் ஆண்டு வரை அரசுக்கு ஜி.எஸ்.டி. மூலமாக ரூ.7.41 லட்சம் கோடி வருவாய் கிடைத்து உள்ளது.