தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நிலை சீராகி வருவதாகக் காவேரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் வயது மூப்பு காரணமாக அவர் இன்னும் சில நாள்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். ராகுல் காந்தி, கருணாநிதியை நேரில் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்பட்டது.
மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், கருணாநிதியை நேரில் சந்தித்தேன். அவர் நலமுடன் உள்ளார்.
தமிழக மக்களைப் போல வலிமையான மன வலிமைக் கொண்டவர் கருணாநிதி. காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் நீண்ட கால நட்பு உள்ளது. அவரது உடல்நிலை குணமடைய சோனியா தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார் என்று தெரிவித்தார்.
கருணாநிதியை ராகுல் காந்தி சந்திந்த புகைப்படம் வெளியிடப்பட்டவுடன், காவேரி மருத்துவமனை வாயிலில் காத்திருக்கும் தொண்டர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர். அவர்கள், இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்பு செய்திகள் : திமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி நேரில் பார்த்த புகைப்படம் வெளியீடு