திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி நேரில் பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க ராகுல் காந்தி இன்று காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே அவரது உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனை சென்று மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
இந்நிலையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை 4.30 மணியளவில் காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.
அப்போது கொட்டும் மழையும் பொருட்படுத்தாது தொண்டர்கள் கோஷம் "எழுந்து வா" தலைவா என்று சத்தம் காதை பிளந்தது.
அதனையடுத்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் ராகுல் காந்தி விசாரித்தார். இந்நிலையில் கருணாநிதியை ராகுல் காந்தி நேரில் பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
புகைப்படத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், கருணாநிதியை நேரில் சந்தித்தேன். அவர் நலமுடன் உள்ளார்.
தமிழக மக்களைப் போல வலிமையான மன வலிமைக் கொண்டவர் கருணாநிதி. காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் நீண்ட கால நட்பு உள்ளது. அவரது உடல்நிலை குணமடைய சோனியா தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார் என்று தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக கருணாநிதியை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்பட்டது குறிப்பித்தக்கது.
தொடர்பு செய்திகள் : திமுக தலைவர் கருணாநிதியை இந்திய துணை ஜனாதிபதி நேரில் பார்த்த புகைப்படம் வெளியீடு