திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் குறைவு காரணமாக அவர் நேற்று அதிகாலை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Special Correspondent

தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே அவரது உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்கு வருகின்றனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் நேற்று காவேரி மருத்துவமனை சென்று மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்நிலையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று நண்பகல் 12.30 மணியளவில் காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.

அவருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வருகை தந்தார். மருத்துவமனைக்கு வந்த அவரை மு.க.ஸ்டாலின் மருத்துவமனையின் வாயிலுக்கு வந்து உள்ளே அழைத்து சென்றார்.

Special Correspondent

அதனையடுத்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் வெங்கையா நாயுடு விசாரித்தார். இந்நிலையில் கருணாநிதியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேரில் பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

புகைப்படத்தில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஸ்டாலின், கனிமொழி, ராசாத்தியம்மாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த புகைபடத்தில் இருந்த இதய துடிப்பு மற்றும் இதர அளவு துல்லியமாக தெரிவதை காட்டி உடல் நிலை சிராக உள்ளது என மருத்துவர்கள் தெவிவிக்கின்றனர்.

இதய துடிப்பு-94
(இயல்புநிலை60-100)

சுவாசஅளவு(நிமிடத்திற்கு)-30
(இயல்புநிலை 10-30)

இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு-94
(இயல்புநிலை 94-99)

Special Correspondent

ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் காவிரி மருத்துவமனையில் "எழுந்து வா தலைவா" எனறு உணர்ச்சிகரமாக கோஷம் எழுப்பி வரும் வேளையில்.,

திருவாரூரில் கமலாலயக் குளத்துக்கு அருகே உள்ள கருணாநிதி 1939 -ஆம் ஆண்டு படித்த வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், . உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அவர், நலம் பெற வேண்டி இந்தப் பள்ளியில் படித்து வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சனிக்கிழமை கூட்டுப் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

தொடர்பு செய்திகள் : காவிரில் கருணாநிதி முக்கிய நடவுகள்