பாஜக அதிமுக கட்சியை தொடர்ந்து அதரிக்கும் தந்திடிவி தமிழகத்தில் அடுத்த யார் முதலமைச்சராக வர வேண்டும் என்று நடத்திய கருத்துக் கணிப்பில் திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 51% ஆதரவு பெற்று முதல் இடத்தில் உள்ளார்.

Special Correspondent

இதற்கு அடுத்து ஆதரவு பெற்றவர்களை விட இரு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆகியோருக்கு 25 சதவீத மக்களும்,
டிடிவி தினகரன், ரஜினி ஆகியோருக்கு தலா 6 சதவீத மக்களும்,
கமல்ஹாசனுக்கு 5 சதவீத மக்களும், அன்புமணிக்கு 4 சதவீத மக்களும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

மோடி அரசின் கீழ் தமிழகம் பலன் பெற்றதா? என்ற கேள்விக்கு, பாதியளவு பலன் பெற்றதாக 23 சதவீத மக்களும், பலன் பெறவில்லை என 61 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 8 சதவீத மக்கள் கருத்து தெரிவிக்கவில்லை இந்த ரிசல்ட் பாஜகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Special Correspondent

இதேபோல் காவிரி ஆணையம் அமைய காரணம் குறித்த கேள்விக்கு மத்திய அரசுதான் என 14 சதவீத மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கேள்விக்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிக ஆதரவை அளித்துள்ளனர். 41 சதவீத மக்கள் உச்ச நீதிமன்றத்தால் காவிரி ஆணையம் அமைந்ததாக கூறியுள்ளனர். அ.தி.மு.க. காரணம் என என 21 சதவீத மக்களும், எதிர்க்கட்சிகள் காரணம் என 24 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டு கொடுத்த வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளதா..? என்ற கேள்விக்கு ஆம் என 11 சதவீதம் பேரும், ஓரளவு என 28 சதவீதம் பேரும், இல்லை என 61 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது தேர்தல் நடந்தால், பிரதமர் பதவிக்கு தகுதியானவர் யார்? என்று மக்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதில் கணிசமானவர்கள் ராகுலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மக்களிடையே ராகுலுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது என்றும் சொல்கிறது.

Special Correspondent

இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் தங்கள் ஆதரவு டிவி தங்களுக்கு எதிராக சொல்கிறதே என அதிமுகவினரிடையே அதிர்ச்சியையும் பாஜகவினரை சோகமும் அடைய செய்து உள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

தொடர்பு செய்திகள் : மோடிக்கு ஆதரவாக ஓட்டு போடாமல் நழுவிய நான்கு அதிமுக எம்பிக்கள்