மராட்டியத்தில் மராட்டிய சமுதாயத்திற்கான இட ஒதுக்கீடு கோரி நேற்று பந்த் அறிவித்து இருந்தனர்.
இட ஒதுக்கீடு கோரி ககாசாஹெப் ஷிண்டேபாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதால் பந்த் கலவரமாக மாறியது.
ஆர்ப்பாட்டகாரர்கள் அவுரங்காபாத்தில் போலீசாருடன் மோதினர், இரண்டு தீயணைக்கும் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்தார்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தலைமை கான்ஸ்டபிள் ஷ்யாம் கட்காஒன்கார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது உடல் இன்னும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. போலீஸ்காரர் மரணம் குறித்து அவுரங்காபாத் கலெக்டர் உதய் செளத்ரி கூறுகையில், ”தலைமை கான்ஸ்டபிள் இறப்பு குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக்குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டுள்ளோம். பிரேத பரிசோதனைக்கு பிறகு வழக்கு தொடர்பான விசாரணை நடைபெறும்” எனக் கூறினார்.
இந்நிலையில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி இதுவரை 5 பேர் தற்கொலை முயற்சி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லாத்தூர் பகுதியில் இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராத்தா சமுதாயத்தினரின் போராட்டம் காரணமாக நேற்று மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து முடங்கியதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மும்பை தாதரில் உள்ள சிவாஜி மந்திரில் கூடி ஆலோசனை நடத்திய மராத்தா சமுதாயத்தினர் இன்று மும்பையில் முழு அடைப்பு நடத்தப்போவதாக அறிவித்தனர்.
முழு அடைப்பு போராட்டத்தையொட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாஜக ஆட்சி ஏற்ற பின்னர் அங்கு சாதி மோதல்கள் அதிமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்பு செய்திகள் : பசு பாதுகாப்பு பெயரில் அல்வார் ராஜஸ்தானில் மறுபடியும் வியாபாரி அடித்துக்கொலை