கருப்பு பணம் பற்றி தகவல் கொடுப்போருக்கு பரிசு வழங்கப்படும் என வருமான வரித்துறை கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது.
இந்நிலையில், பினாமி சொத்துக்கள், கருப்பு பணம் குறித்து தெரிவிப்போருக்கு ரூ.1 கோடி முதல் ரூ.5 கோடி வரை பரிசு அளிக்கும் திட்டங்களை வருமான வரித்துறை வெளியிட்டது.
மேலும், வரி ஏய்ப்பு பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.50 லட்சம் வரை வெகுமதி அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
பினாமி சொத்துக்கள் குறித்து துல்லியமான தகவல் அளிப்பவருக்கு ரூ.1 கோடி வரை வெகுமதி வழங்கப்படும் எனவும், தகவல் அளிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் பற்றி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ஒருவர் துல்லியமான தகவல் அளித்தால் அவருக்கு ரூ.5 கோடி வரை வெகுமதி அளிக்கப்படும்.
அதேசமயத்தில் தவறான தகவல்கள் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கருப்பு பணத்தை கண்டுபிடிப்பது, வரி ஏய்ப்பை தடுப்பது ஆகியவற்றில் பொதுமக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கருப்பு பணம் குறித்து தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கும் திட்டத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தொடர்பு செய்திகள் : புல்லட் ரயில் திட்டம் புஸ்ஸா..