துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் மற்றும் பலருடன் டெல்லிச் சென்றார். இன்று பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்துப் பேச உள்ளதாக முதலில் தகவல் வெளியானது.

Special Correspondent

ஓ.பன்னீர் செல்வத்தின் டெல்லி பயணம் குறித்து பேட்டி அளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தனது சகோதரர் சிகிச்சைக்காக தனி விமானம் கொடுத்து உதவியதற்காக மத்திய அமைச்சருக்கு, நன்றி தெரிவிக்கவே ஓபிஎஸ் டெல்லி சென்றுள்ளார் என கூறினார்.

டெல்லியில் பேட்டி அளித்த ஓ.பன்னிர் செல்வமும் இது அரசியல் பயணம் இல்லை. எனது சகோதரர் சிகிச்சைக்கு ராணுவ விமானம் வழங்கியதற்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவிக்க வந்தேன் என கூறியதோடு நில்லாமல் சந்த்திது விட்டதாகவும் கூறினார்.

ஆனால் டெல்லியில் அதிமுக எம்.பி. மைத்ரேயனை சந்திக்கவே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நேரம் ஒதுக்கி உள்ளார் எனவும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை எனவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகம் தகவல் வெளியிட்டது.

Special Correspondent

இதனால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சந்த்தித்தாக ஓ பன்னீர் செல்வம் என் பொய் சொல்ல வேண்டும் என்று சமூக தளத்திலே பதிவர்கள் அதிமுகவின் ஒபிஎஸ்சை கேள்வி மேல கேள்வி கேட்டு துளைத்து எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்திடம், நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்ததாக வெளியான தகவல் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த ஓ பன்னீர் செல்வம், சோகமுடன் “எதையும் தாங்கும் இதயம் வேண்டும்” என தெரிவித்தவாரே முகத்தை தொங்க போட்டு கொண்டு சென்றார்.

Special Correspondent

அதிமுகவின் முக்கிய புள்ளியான் ஒபிஎஸ் சந்திக்க மறுத்து பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு தாவி வந்த மைத்ரேயனை மட்டும் பிரதமர் மோடியின் நம்பிகையில் இருக்கும் முக்கிய அமைச்சர் நிர்மலா சந்த்திது பேசி இருப்பது அரசியலில் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.

தொடர்பு செய்திகள் : மோடிக்கு ஆதரவாக ஓட்டு போடாமல் நழுவிய நான்கு அதிமுக எம்பிக்கள்