மேட்டூர் அணை 120 அடியை தாண்டியதைத் தொடர்ந்து காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Special Correspondent

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின.

இதனால் அந்த அணைகளில் இருந்து கடந்த வாரம் காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக கடந்த 17-ந் தேதி இரவு 9 மணிக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதையடுத்து கடந்த 19-ந் தேதி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது அணையின் நீர்மட்டம் 109 அடியாக இருந்தது.

அணையில் இருந்து நீர் மின் நிலைய மதகுகள் மூலம் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில், நீர்வரத்து தண்ணீர் திறப்பை விட பல மடங்கு அதிகமாக இருந்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி 116.98 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இரவு 8 மணி அளவில் 118 அடியாக உயர்ந்தது.

கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை அளந்து கண்காணித்து வருகின்றனர்.

இதனால், பாதுகாப்பு கருதி அணையில் இருந்து நேற்று இரவு 8 மணிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

Special Correspondent

மொத்தத்தில் நேற்று இரவு 8 மணி முதல் அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதுதவிர இரவு 10 மணி முதல் சேலம் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

மேட்டூர் அணை வரலாற்றில் 16 கண் பாலம் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுவது இது 39-வது ஆண்டு ஆகும் என்பதும் குறிப்பிடதக்கது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.41 அடியில் இருந்து 120.05 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து இன்று இரவு 9 மணிக்கு 75,000 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது.

பாதுகாப்பு கருதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுகிறது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

முக்கியமாக கல்லணை கால்வாய், கொள்ளிடம் கரையோர மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேட்டூர் அணைக்கு வரும் நீர் முழுவதும் திறக்கப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

நீர் நிலை அருகாமையில் குழந்தைகள் விளையாட செல்லாமல் பெற்றோர் பார்த்துக்கொள்ள வேண்டும். குளித்தல், நீச்சல் அடித்தல், மீன் பிடித்தல், செல்பி எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். காவிரி நீர் பாயும் ஆறுகள், குளங்கள், நீர் நிலை பகுதிகளில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என்று அறுவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்பு செய்திகள் : மணல் கொள்ளையால் உருவான செயற்கை பள்ளம் காரணமா : 4 பேர் பலி