சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

Special Correspondent

காவிரி ஆற்று வெள்ளத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட 5 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.

ரெட்டியூரை சேர்ந்தவர் கோபால் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் இவரது வீட்டிற்கு ஈரோடு மாவட்டம் ஜெயமங்கலத்தில் இருந்து வந்த உறவினர்கள் உள்பட 6 பேர் ஒரே குழுவாக அருகில் உள்ள காவிரியில் குளிக்க சென்றனர்.

அப்போது பல இடத்திலே ஆற்று மணல் முறைகேடகாக அதிமுக ஏழாண்டு ஆட்சியில் அள்ளப்பட்டதால் பல இடத்தில் மணல் இல்லாத பள்ளம் காரணமாக அவர்கள் தத்தளித்து போரடினர்.

அப்போது கூக்குரல் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக தனுஸ்ரீ என்ற கல்லூரி மாணவியை மட்டும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

கோபாலின் மற்றொரு மகளான வாணிஸ்ரீ, ஹரிஹரன் என்ற 9 வயது சிறுவன் மற்றும் ஜெயமங்கலத்தை சேர்ந்த சரவணன் அவரது மனைவி மைதிலி, பிரவீணா என்ற 15 வயது பெண் ஆகிய 5 பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

Special Correspondent

இதனையடுத்து மேட்டுர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 5 பேர்களில் இதுவரை 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவி தனுஸ்ரீ ஏற்கனவே உயிருடன் மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்டியூரில் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இடத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ஆய்வு செய்து வருகிறார். இச்சம்பவம் ரெட்டியூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்பு செய்திகள் : காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்திரவின் கீழ் மேட்டுர் அணை திறப்பு : எடப்பாடி தகவல்