சுங்கச்சாவடியில் சுங்ககட்டணம் வசூலிக்கும் முறையை மாற்றி ஆண்டுக்கு ஒருமுறை சுங்ககட்டணம் வசூலிக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.வரி வரம்பிற்குள் கொண்டுவந்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண தொகையை நீக்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளுடன் நாடு முழுவதுமுள்ள லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் அறிவித்தனர்.
தற்போது இந்திய அளவில் 90 லட்சம் லாரிகள் மற்றும் மினி லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் தமிழகத்தில் மட்டும் 4.5 லட்சம் கனரக வாகனங்களும் ஒன்றரை லட்சம் மினி லாரிகளும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. இரண்டாவது நாளாக தொடரும் இந்த வேலைநிறுத்தத்தில் கேஸ் டேங்க் லாரி உரிமையாளர்களும் பங்குபெறுவதாக அறிவித்துள்ளனர்.
இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை இன்னும் சிலநாட்களில் கூட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் விவசாய விளைபொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச்செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. லாரிகள் வேலைநிறுத்தத்தை முன்னிட்டு தமிழக அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் எடுத்துச்செல்ல அரசு அறிவுறுத்தியுள்ளது.
தொடர்பு செய்திகள் : சிக்கலில் சிக்கும் புது 100 ரூ நோட்