இன்று காவிரி தண்ணிரை மேட்டுர் அணையில் இருந்து திறந்து விட்டு பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் படியே மேட்டுர் அணை திறக்கப்பட்டது என்றார்.

Special Correspondent

முன்னதாக கர்நாடகாவின் முக்கிய அணைகளான கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகள் நிரம்பியதால் அணைக்கு வரும் நீர்வரத்து முழுக்க தமிழகம் செல்லும் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு காவிரியில் ஒரு லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109 கன அடியை எட்டிவிட்டது. இது சீக்கிரம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வரைவில் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டுர் அணையில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டது. இது படிப்படியாக இரவுக்குள் 20 ஆயிரம் கன அடியாக உயரும் என்கிறார்கள் அரசு அதிகாரிகள்.

இதனால் சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓட இது தமிழக விவாசயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்த நிலையில், கர்நாடகா காவிரியில் திறந்து விடப்படும் நீரை நாம் உபரி நீர் என்கிறோமே, அது கர்நாடகா நமக்கு திறந்து விட வேண்டிய தண்ணீரின் கணக்கில் வருமா? வராதா? எவ்வளவு நீர் திறந்து விட வேண்டும்? எவ்வளவு திறந்து விடப்பட்டுள்ளது என்ற கேள்வியும் வருவது இயற்கை.

அதாவது, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் காவிரியில் இருந்து கர்நாடக அரசு தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி மற்றும் ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Special Correspondent

மத்திய நீர்வள ஆணையம் பிலிகுண்டுலு நீர்த்தேக்கத்தில் அமைத்துள்ள நதிநீர் அளவீட்டுக் கருவியின் மூலம் அளக்கப்பட்ட அளவின் அடிப்படையில் தெரிய வந்திருக்கும் தகவல் என்னவென்றால், கடந்த ஜூன் மாதம் மட்டும் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 13.29 டிஎம்சி தண்ணீரை உபரி நீராக அதாவது கர்நாடக அணைகள் நிரம்பிவிட்டதால் கர்நாடக அரசு காவிரியில் திறந்து விட்டுள்ளது.

அந்த வகையில் ஜூன் மாதம் தமிழகதிற்க்கு சேர வேண்டிய காவிரி நீரை விட 4.1 டிஎம்சி தண்ணீர் அதிகமாகவே கர்நாடகா திறந்துவிட்டுள்ளதாக கருதப்பட வேண்டிள்ளது என்கிறார்கள் வல்லுனர்கள்.

சட்டப்படி ஒவ்வொரு மாதமும் கர்நாடகத்திலிருந்து ஆகஸ்டு மாதம் 45.95 டி.எம்.சி, செப்டம்பர் மாதம் 36.76 டி.எம்.சி, அக்டோபர் மாதம் 20.22 டி.எம்.சி, நவம்பர் மாதம் 13.78 டி.எம்.சி, டிசம்பர் மாதம் 7.35 டி.எம்.சி, ஜனவரி மாதம் 2.7 டி.எம்.சி பிப்ரவரி முதல் மே மாதம் வரை 2.50 டி.எம்.சி தண்ணீரும் கர்நாடக அரசு காவிரியில் திறந்து விடப்பட வேண்டும் என்பது உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை மழை பெய்து விட்டதால் காவிரி கர்நாடகா அரசின் விருப்பத்தை எல்லாம் தாண்டி காவிரி தண்ணிர் தமிழகம் வந்த நிலையில் இனி வரும் காலங்களில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் அதிகாரம் தெரிய வரும் என்கிறார்கள் வல்லுனர்கள்.

தொடர்பு செய்திகள் : மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை நெருங்கும் செய்தியால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி