மனைவியை கட்டாயப்படுத்துவதை பலாத்காரம் என்று கருத முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனைவியுடன் கட்டாயப் பாலுறவு கொள்வதை பாலியல் பலாத்காரம் என அறிவிக்கக் கோரி, தொண்டு நிறுவனம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால், மனைவியை கட்டாயப்படுத்தி பாலுறவு கொள்வது பலாத்காரம் இல்லை என மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விவாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கீதா மிட்டல், ஹரி சங்கர் ஆகியோர் அமர்வு, பாலுறவு வேண்டாம் என்று கூற ஆண், பெண் இருவருக்கும் திருமண பந்தம் உரிமையளிப்பதாக தெரிவித்தனர்.
மேலும் திருமணம் முடிந்துவிட்டதால் பெண் எப்போதும் பாலுறவுக்கு தயாராக இருப்பார் என கணவர் கருதக் கூடாது, திருமணம் என்பது பாலுறவு கொள்ள பெண் எப்போதும் தயாராக இருப்பார் என்பதன் அர்த்தமல்ல என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தன் விருப்பத்தை மனைவியிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அதற்காக, மனைவியை கட்டாயப்படுத்துவதை பலாத்காரம் என்றும் கருத முடியாது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
ஆனாலும் திருமணம் போன்ற உறவின் போது பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இருதரப்புக்குமே உடலுறவுக்கு மறுப்பு தெரிவிக்க உரிமை உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், உடல் ரீதியாக வற்புறுத்துவது மட்டுமே பாலியல் வன்புணர்வு ஆகிவிடாது, உடலில் உள்ள காயங்கள் குறித்து ஆராய தேவையில்லை எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
திருமணம் என்பது பெண்கள் எப்போதும் உடலுறவுக் தயாராகவும், விருப்பத்துடனும், இணக்கத்துடனும் இருப்பதாக அர்த்தம் ஆகாது, சம்பந்தப்பட்ட பெண் அதற்கு தயாராக இருப்பதாக ஆண் நிரூபிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
கணவன் தனது மனைவியின் குடும்பத் தேவைகளுக்கான பணத்தை உடலுறவு கொண்டால் மட்டுமே தருவேன் என்று மனரீதியாக துன்புறுத்துவதும் பாலியல் வன்புணர்வாகவே கருத வேண்டும் எனவும் மேலும் இன்றைய காலகட்டத்தில் பாலியல் வன்புணர்வுக்கு அர்த்தம் முற்றிலும் மாறிவிட்டதாகவும் அவர்கள் கூறினர்.
எனினும் இது தொடர்பாக குழப்பமான சூழ்னிலையில் எந்த ஒரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்பதால் வழக்கை வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
தொடர்பு செய்திகள் : ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத் ஆதரவாளர்கள் சுவாமி அக்னிவேஷ் மீது கொடூர கொலைவெறி தாக்குதல்