பாஜக ஆட்சி செய்யும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொள்ள சென்ற சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். அவரை தாக்கியது ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்து உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டுவரும் போலீஸ் 20 பேரை பிடித்து விசாரிக்கிறது.
இன்று காலை அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு வெளியே கூடியிருந்த, பா.ஜனதா இளைஞர் அணியினர், ஆர்.எஸ்.எஸ். விஷவ இந்து பரிஷத் அமைப்பினர் அவரை தாக்கினர் என உள்ளூர் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்கள், ஜார்க்கண்டில் பழங்குடி மக்களை தூண்டிவிடும் கிறிஸ்தவ மிஷனரிகளுடன் சுவாமி அக்னிவேசுக்கு தொடர்புள்ளது என குற்றம் சாட்டுகிறார்கள்.
மாட்டிறைச்சி பற்றி கருத்து தெரிவிக்கும் அவர் 'சனாதன் தர்மம்' எதிராக செயல்படுவதாகவும் வலதுசாரி ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
அக்னிவேஷ் அரியானா மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். அவர் அரசியலில் இருந்து வெளியேறுவதற்கு முன்னதாக அமைச்சரவையிலும் இடம் பெற்று இருந்தார். மேலும் அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு குழுவிலும் இடம் பெற்று இருந்தார். இப்போது அவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே சுவாமி அக்னிவேஷ் பேசுகையில், என் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் போலீஸ் எதுவும் கிடையாது. மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மற்றும் மாஜிஸ்திரேட்டிற்கு நான் தொடர்ச்சியாக அழைப்பு விடுத்தேன், ஆனால் அவர்கள் யாரும் வரவில்லை. ஏபிவிபி மற்றும் பா.ஜனதா இளைஞர் அணியினர் போராட்டம் நடத்தப்போவதாக எனக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் போராட்டம் நடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன், பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். ஆனால் அவர்கள் யாரும் வரவில்லை. நான் வெளியே வந்தபோது, என்னை தாக்கினார்கள். என்னை தவறான முறையில் நடத்தினார்கள். அவர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணமால், மீடியாக்களிடமும் ஆதாரங்கள் உள்ளது.
குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தொடர்பு செய்திகள் : என்கவுன்ட்டரில் போலிஸ் சுட்டு கொன்ற ரவுடிக்கு ஆளும்கட்சி அதிமுக எம்.எல்.ஏ அஞ்சலி