அதிமுக மீது தேவையற்ற குற்றச்சாட்டு கூறுவதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும்; இல்லையெனில் நாங்கள் உரிய பதிலடி கொடுப்போம் என்று அமைச்சர் ஜெயகுமார் ஆவேசமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மெரீனாவில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர், செய்தியாளர்களிடம் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேசுகையில், தமிழக அரசு மீது தேவையில்லாமல் குற்றஞ்சாட்டுவது, மத்தியில் இருப்பவர்களுக்கு வழக்கமாகிவிட்டதாக கூறிய ஜெயகுமார், அதிமுக, தமிழக அரசு மீது தேவையற்ற குற்றச்சாட்டு கூறுவதை இத்துடன் பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இல்லையெனில் தங்கள் அதிமுக தரப்பு கிளர்ந்து எழுந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் ஜெயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக வினர் குற்றச்சாட்டுகளை கூறினால், பதிலடி கொடுக்க தாங்களும் தயாராக இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்தார்.
முன்னதாக பாஜக தலைவர் அமித்ஷா தமிழக ஆட்சியில் ஊழல் மிகுந்து விட்டதாகவும் கூறி சென்ற நிலையில் பின்னர் வந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் சத்துணவு திட்டத்தில் 5000 கோடி ஊழல் என்று பேசியதற்க்கு முதலவர் எடப்பாடி சார்பில் பதிலடியாக தமிழக அமைச்சர் குரல் ஒலித்ததாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு செய்திகள் : 2016-ல் கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் குமாரசாமி கூட்டுறவு வங்கியில் ரூ.245 கோடி டெபாசிட் கண்டுபிடிப்பு