உலகின் பழைமையான மொழிகளுள் தமிழும் ஒன்று. உலகத்தில் அதிகமாக பேசுபவர்களின் எண்ணிக்கையில் சுமார் 8 கோடி பேர் பேசும் மொழியாக தமிழ் பதினைந்தாவது இடத்தில் உள்ளது.
தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகள் (சட்டத்தின்படி) நாடுகள் வரிசையில் சிங்கப்பூரில் 150,184 மக்களும், இலங்கையில் 5,065,930 மக்களும் இருப்பாதக அந்நாட்டு சென்சஸ் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
மேற்கூறிய நாடுகள் தவிர மலேசியா மொரிசியசு இறீயூனியன் சிஷெல்ஸ் கனடா நாடுகளிலும் தமிழ் ஒரு பண்பாட்டு மொழியாக வாழ்கிறது.
இந்த நிலையில் கனடாவின் ஒண்டாரியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் வி.சே' தணிகாசலம், திருக்குறள் நூல்மீது உறுதிமொழி ஏற்று பதவியேற்றார்.
முன்னதாக முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபைஈசனும் திருக்குறளின் மீதே உறுதிமொழி எடுத்திருந்தார். என்பதும் குறிப்பிடதக்கது.
தொடர்பு செய்திகள் : இங்கிலாந்து ராணிக்கு காந்தி பரிசளித்த கைத்தறித் துண்டை பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசளிப்பு