ஸ்ரீரங்கம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட திருவளர்ச்சோலையில் புத்துநாகம்மன் கோவில் அருகே காவிரி ஆற்று கரையிலிருந்து இருந்து அழுகிய நிலையில் ஒரு உடல் இருப்பதை அந்த பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து ஸ்ரீரங்கம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

Special Correspondent

இறந்து கிடந்தவர் அணிந்து இருந்த உடையின் நிறம், அவர் விரலில் இருந்த சாய்பாபா மோதிரம் உள்ளிட்ட தகவல்களை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தெரிவித்து சமீபத்தில் யாரேனும் மாயமாகி உள்ளனரா? என விசாரிக்க துவங்கினர்.

விசாரணையில் அரியலூர் மாவட்டம் செந்துறை பொன்பரப்பி பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்றும் இவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் முடநீக்கியல் மருத்துவராக இருந்து வருகிறார் என்றும் தெரியவந்தது.

இதே ஸ்ரீரங்கம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரி டிரைவர் ஆண்டவர் அடித்து கொலை செய்யப்பட்டு மேலூர் அருகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

திருவளர்ச்சோலை பகுதியில் விஜயகுமார் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தின் அருகில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டு கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த கொலயில் போலிசார் இது வரைக்கும் எந்த துப்பும் துலக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் அரியலூரை சேர்ந்த டாக்டர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Special Correspondent

இவர் கடந்த 8ம் தேதி சொந்தவூருக்கு சென்று உறவினர்களை பார்த்துவிட்டு அவருடைய மனைவி ஈரோட்டில் டீச்சராக பணிபுரிவதால் அவரை பார்த்துவிட்டு வருவதாக சொல்லி ஊரிலிருந்து கிளம்பியவர். திருச்சி டோல்கேட்டில் இறங்கி ஈரோட்டிற்கு பஸ் ஏறும் போது கூப்பிடுகிறேன் என்று தன் மனைவியிடம் கடைசியாக பேசி இருக்கிறார். அதன் பிறகு செல்போன் சிக்னல் கிடைக்கவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்து திடீர் என எங்கே தேடியும் கிடைக்காத தன் கணவனை கண்டுபிடித்து தரும்படி அவரது மனைவி கற்பகாம்பிகா செந்துறை போலீஸ் நிலையத்தில் கடந்த 9-ந் தேதி புகார் அளித்து இருந்ததும் தெரியவந்தது.

உடனே ஸ்ரீரங்கம் போலீசார் கற்பகாம்பிகாவை திருச்சிக்கு வரவழைத்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த உடலை காண்பித்தனர். அப்போது அந்த உடலை பார்த்த அவர் அது தனது கணவர் விஜயகுமார் தான் என்று கூறி கதறி அழுதார்.

ஸ்ரீரங்கம் போலீசின் முதற்கட்ட விசாரணையில் டாக்டருக்கு உறையூரில் உள்ள ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும். அவரை சந்திப்பதற்காக டோல்கேட்டில் இறங்கியிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த பெண் விவகாரத்தில் ஏதோனும் பிரச்சனையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்கிற ரீதியில் போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

தொடர்பு செய்திகள் : சிலைகள் மாயமாவது அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு