தங்களை தவிர்த்து சவுதி அரேபியா, ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தால் சிறப்பு சலுகைகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

Special Correspondent

சமீபத்தில் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக ட்ரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்து ஈரான் அரசின் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.

அதனை தொடர்ந்து அமெரிக்கா போல தனது நட்பு நாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் தொடர்ந்து நிர்பந்திக்கப்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா நேரடியாகவே மிரட்டல் விடுத்தது.

Special Correspondent

புதுடெல்லியில் நடைபெற்ற, அனைத்திந்திய சிறுபான்மையினர் முன்னணி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஈரான் தூதரக அதிகாரி மசூத் ரெஸ்வானியன் ரஹாகி பங்கேற்றார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்தியாவிற்கான ஈரான் தூதர் மசூத் ரெஸ்வானியன் ராஹகி தங்களது நாட்டிற்கு பதில் சவுதி அரேபியா, ரஷியா, ஈராக், அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்து 10% கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தால், இறக்குமதியில் அளிக்கப்படும் மற்ற சிறப்பு சலுகைகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

Special Correspondent

ஈரானில் சபாஹர் துறைமுகத்தின் விரிவாக்க பணிக்கு முதலீடு செய்யப்படும் என்று இந்தியா அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் சுட்டி காட்டினார். மேலும் அவர் கூறியதாவது, “2012-2015 அமெரிக்க பொருளாதாரத் தடைக் காலக்கட்டத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் சப்ளையை ஈரான் பார்த்துக் கொண்டது. இப்போது ஈரானைக் கழற்றி விட்டு வேறு இறக்குமதி நாடுகளை அணுகினால் டாலர் தொகையில் இந்தியா இறக்குமதி செய்ய நேரிடும் இதனால் செலவு அதிகரிக்கும் மேலும் ஈரான் கொடுத்து வந்த பிற சிறப்புரிமைகள், சலுகைகளையும் இந்தியா இழக்க நேரிடும்” என்றார் ரஹாகி.

எரிவாயுவை நேரிடையாக கடல் வழியே பைப் மூலம் ஈரானில் இருந்து கோண்டு வரும் திட்டமும் இதனால் பதிக்கபடும் அபாயமும் உள்ளது.

மேலும் இந்தியா ஈரான் வர்த்தகம் இந்திய ருபாயில் இருந்த பயன் இதனால் போகும் என்பதால் அமெரிக்கவுக்கு என்ன பதில் சொல்வது என்று இந்தியா முழித்து வருவதாக சர்வ தேச பொருளதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

தொடர்பு செய்திகள் : தாய்லாந்து குகை: 13 பேரும் வெற்றிகரமாக மீட்பு