10 அரசுப் பல்கலைக்கழகங்கள், 10 தனியார் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 20 நிறுவனங்களை உலகத்தர பல்கலைக்கழகங்களாக அறிவிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், மும்பை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், தில்லி இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகிய 3 அரசு நிறுவனங்களையும், பிட்ஸ் பிலானி, மணிப்பால் உயர்கல்வி நிறுவனம், ஜியோ பல்கலைக்கழகம் ஆகிய 3 தனியார் பல்கலைகளையும் மட்டும் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி தலைமையிலான குழு முதற்கட்டமாக தேர்வு செய்துள்ளது.

Special Correspondent

மீதமுள்ள 14 இடங்களுக்கு தகுதியான நிறுவனங்கள் கிடைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் முகவரியே இல்லாத ஜியோ பல்கலைக்கழகத்துக்கு உலகத் தர பல்கலைக்கழகம் என்ற தகுதி கிடைத்தது எப்படி என்பதுதான் பூதாகர சர்ச்சையே இப்போது அரசுக்கு உருவாக்கி தந்துள்ளது.

உலகின் முன்னணி 500 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற போட்டியிடுவதற்காக இந்தியாவின் 3 அரசு பல்கலைக்கழகங்களுக்கும், 3 தனியார் பல்கலைக்கழகங்களும் உலகத்தர பல்கலைக்கழகங்கள் தகுதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இன்னும் தொடங்கப்படாத, முகவரி கூட இல்லாத, ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ பல்கலைக்கழகத்துக்கும் இந்தத் தகுதி வழங்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்கிறார் பாமக வின் அன்புமணி இராமதாஸ்.

இன்னும் தொடங்கப்படாத ஜியோ பல்கலைக்கழகத்துக்கு உலகத் தர பல்கலை என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உயர்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து மத்திய உயர்கல்வித் துறையின் செயலர் ஆர்.சுப்ரமணியம் ஏஎன்ஐக்கு அளித்த பதிலில், க்ரீன்ஃபீல்ட் பிரைவேட் இன்ஸ்டிடியூஷன் என்ற பிரிவின் கீழ் ஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு முன்குறிப்பிட்ட உலகத் தர பல்கலைக்கழகம் என்ற தகுதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Special Correspondent

விண்ணப்பத்தில் கூறப்பட்டிருக்கும் அனைத்து விவரங்களையும் ஆராயும் உயர்மட்டக் குழுவினர், அதில் கூறப்பட்டிருக்கும் தகவல்களையும், பல்கலைக்கழகத்துக்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்தும் திறன், கட்டமைக்கும் மற்றும் உருவாக்கும் குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் என அனைத்தையும் பரிசீலித்து, ஜியோ பல்கலைக்கு மட்டுமே அந்த தகுதி இருப்பதாக முடிவெடுத்து தேர்வு செய்தனர். அவர்களது தேர்வுக்கு மத்திய அரசு மரியாதை கொடுத்துள்ளது என்றார் சுப்ரமணியம்.

இதன் மூலம் ஜியோ பல்கலைக்கழகத்துக்கு முன்குறிப்பிட்ட உலகத் தர பல்கலைக்கழகம் என்ற அந்தஸ்துக்கான கடிதம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதம் பெற்ற பல்கலைக்கழகம், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் பல்கலைக்கழகத்தை கட்டி முடித்து பணியை துவக்க வேண்டும் என்றும் அவ்வாறு கட்டி முடிக்கப்பட்டால், அப்போது அந்த பல்கலைக்கழகத்துக்கு உலகத் தரப் பல்கலைக்கழகம் என்ற அந்துஸ்து கிடைக்கும் என்கிறார் சுப்ரமணியம்.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 5 நிறுவனங்களின் தகுதி குறித்து எந்த ஐயமும் இல்லை. ஆனால், ஆறாவதாக இடம் பெற்றுள்ள ஜியோ பல்கலைக்கழகத்துக்கு முகவரி கூட இல்லாத நிலையில் அதற்கு உலகத்தரத் தகுதி எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்பது தான் கல்வியாளர்கள் எழுப்பும் வினா ஆகும். சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம், தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்குக் கூட இத்தகுதி இல்லை என நிராகரிக்கப்பட்ட நிலையில், இன்னும் தொடங்கப்படாத ஜியோ பல்கலைக்கு அத்தகைய தகுதி இருப்பதை கோபாலசுவாமி குழு எவ்வாறு கண்டறிந்தது?

34 விழுக்காடு மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு தேர்ச்சி பெறத் தகுதி இல்லை என்று கூறிவிட்டு, தேர்வே எழுதாத மாணவனைத் தேர்ச்சி பெறச் செய்தால் அது எவ்வளவு அபத்தமானதாக இருக்குமோ, அதைவிட அபத்தமானதாகத் தான் இந்த தேர்வு அமைந்திருக்கிறது என்று கேள்விகளை கல்வியாளர்கள் எழுப்பி வரும் வேளையில்.,

மோடி அரசின் இந்த அறிவிப்பை கிண்டல் செய்யும் விதமாக பல பதிவுகளை சமூகவலைதளத்தில் வந்த வண்ணம் உள்ளது.

தொடர்பு செய்திகள் : அமித்ஷா வருகை மீண்டும் ட்ரெண்டான gobackamithshah ஹாஷ்டாக்