தமிழகம், புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட 12 மாநிலங்கள் லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்றவில்லை. லோக் ஆயுக்தாவை அமைக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டன.

Special Correspondent

இதற்கு தமிழக அரசு பதில் அளித்தது. ஆனால், தற்போது வரை லோக் ஆயுக்தா அமைக்கப்படாமல் இருப்பதற்கு தமிழக அரசு முன் வைத்த காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும், லோக் ஆயுக்தா அமைப்பதற்கான நடவடிக்கை குறித்து வருகிற 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விதித்த கெடு நாளையுடன் நிறைவடையும்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.

தற்போது 17 மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களை விசாரிக்க லோக் பால் அமைப்புக்கு அதிகாரம் உள்ளது. 2013-ம் ஆண்டு லோக் ஆயுக்தா சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்டது. மத்திய அரசு சட்டப்படி மாநில அரசுகள் லோக் ஆயுக்தா வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தின்போது, லோக் ஆயுக்தா தொடர்பாக கேள்வி எழுப்பிய திமுக உறுப்பினர் சேகர் பாபுவுக்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நடப்பு கூட்டத்தொடரிலேயே லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெறும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டத்தில், லோக் ஆயுக்தா சட்டவரைவு தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு அமைச்சர் ஜெயக்குமார் இந்த சட்டத்தை நிறைவேற்றினார்.ஆய்வுக்குப்பின் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படும்.

Special Correspondent

முன்னதாக சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் லோக் ஆயுக்தா அமைப்பு சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றும்., ஆனால் தற்போது மக்களின் கருத்துகளை கேட்காமல் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு அறப்போர் இயக்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

லோக் ஆயுக்தா சட்டம் அமல்படுத்தப்படும் மாநிலத்தில், ஊழல் தொடர்பான புகார்களை விசாரிக்கும் அமர்வு அமைக்கப்படும்.

இந்த அமர்வில் அரசு ஊழியர்கள், முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ உள்ளிட்டோர் மீதான ஊழல் புகார்கள் விசாரிக்கப்படும். சட்டப்பூர்வ தன்னாட்சிமிக்க இந்த அமைப்பு, புகார்களை விசாரிக்க ஆளுநர் அல்லது அரசின் அனுமதியை பெற தேவையில்லை.

மேலும், லோக் ஆயுக்தாவில் வரும் புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளோ அல்லது செஷன்ஸ் மற்றும் கூடுதல் செஷன்ஸ் நீதிபதிகளோ நியமிக்கப்படுவார்கள். அந்த நீதிபதிகளின் கட்டுப்பாட்டில் செயல்படும் போலீசார், முழு அதிகாரத்துடன் எந்த குறுக்கீடும் இல்லாமல் சுதந்திரமாக செயல்படுவார்கள்.

ஆரம்பகட்ட விசாரணையிலேயே குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருந்தால், புகாருக்கு உள்ளானவர்களின் சொத்துக்களை முடக்க லோக் ஆயுக்தாவுக்கு அதிகாரம் உண்டு. லோக் ஆயுக்தாவில் நடைபெறும் விசாரணை பற்றி, உச்சநீதிமன்றமோ, உயர்நீதிமன்றமோ கேள்வி எழுப்ப முடியாது.

குற்றச்சாட்டுகளுக்கு போதிய சாட்சியங்கள் இருக்கும்பட்சத்தில், அனைத்து ஆவணங்களையும் குற்றவியல் விசாரணை இயக்குநரகத்துக்கு லோக் ஆயுக்தா அனுப்பி வைக்கும். அதன்பிறகு, அந்த வழக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும்.

முக்கியமாக அலோக் ஆயுக்தா வரம்புக்குள் அமைச்சர் என்றால் முதலமைச்சரும் அடக்கம் என மசோதாவில் தகவல் என்பதும் குறிப்பிடதக்கது.

காலதாமதம் என்றாலும் தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை வரவேற்ப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார்.

தொடர்பு செய்திகள் : ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க பசுமைத் தீர்ப்பாயம் மறுப்பு