தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், சட்டப்பேரவையில் தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவருக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், பாண்டியராஜன், செம்மலை உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

Special Correspondent

இதையடுத்து கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததால் திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

Special Correspondent

இந்த தீர்ப்பை எதிர்த்து தி.மு.க. சார்பிலும், டி.டி.வி.தினகரன் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு, துணை முதல்வர் ஒபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ளது. மேலும் சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவைச் செயலருக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில் 4 வாரங்களுக்குள் மனுதாரரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனக் உத்தரவிட்டுள்ளது.

தொடர்பு செய்திகள் : அதிமுகவும் எடப்பாடியும் மறந்து போன ஜெயலலிதாவின் வீர உரை