ஹசாரிபாக் என்ற இடத்தில் கடந்த ஆண்டு அலிமுதின் அன்சாரி என்ற இறைச்சி வியாபாரியை 11 பேர் அடங்கிய கும்பல் தாக்கி கொன்றது.
இந்த இறைச்சி வியாபாரியை அடித்துக் கொன்ற கொலையாளிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த மத்திய அமைச்சர்க்கு பலத்த கண்டங்கள் வழுத்து வருகிறது.
காரில் மாட்டிறைச்சியை கடத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் படுகொலை நடத்தப்பட்டது. கொலையாளிகள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் ஜாமினில் வெளியே வந்தனர்.
இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த 8 கொலையாளிகளை வீட்டிற்கு அழைத்துவந்த மத்திய அமைச்சர் மாலை அணிவித்து வெகுவாக பாராட்டியுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவருக்கு எதிர் கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறது.
சடலங்கள் மீது அரசியல் செய்து சமூகத்தை பாஜக துண்டாடுகிறது என்று காங்கிரஸ் காட்டமாக விமர்சித்துள்ளது.
கொலையாளிகள் ஜாமினில் வந்த்தால் அவர்களை பாராட்டியதில் தவறு இல்லை என்பது அமைச்சரின் விளக்கமாகும்.
கடும் கண்டனங்கள் குவிய காரணமான இந்த சம்பவம் பாஜக ஆளும் ஜார்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்தேறியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
தொடர்பு செய்திகள் : சத்துணவு திட்டத்தில் முறைகேடு தொடர்பாக ஐ.டி. ரெய்டு : தமிழக அமைச்சரின் தொடர்பு அம்பலம்