விமான பாகங்கள், வேளாண் கருவிகள், செமிகண்டக்டர்கள் உள்ளிட்ட சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பல்வேறு பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
இன்னும் 2 வாரங்களில் மேலும் 16 பில்லியன் டாலர்கள் அளவுக்கு சீன இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட உள்ளதாகவும், படிப்படியாக இந்த அளவு 550 பில்லியன் டாலர்களை எட்டலாம் எனவும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்காவின் விலைக்கு நிகரான 25 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த தகவலை சீன பத்திரிக்கைகள் பலவும் வெளியிட்டு வரும் நிலையில், இது குறித்து சீன வர்த்தகத்துறை அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் கூறுகையில், நாங்கள் முதலில் வரி விதிக்கவில்லை. அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு எங்களின் முதல் பதிலடி. பொருளாதார வரலாற்றின் மிகப் பெரிய வர்த்தக போரை அமெரிக்கா துவக்கி உள்ளது.
உலக பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த கொடுமைக்கார செயலால் ஏராளமான அப்பாவி பன்னாட்டு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். அமெரிக்கா சர்வதேச வணிக விதிகளை மீறி வருவது குறித்து உலக வர்த்தக மையத்திடம் புகார் அளித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு எதிரான பதிலடி நடவடிக்கையை சீனா துவக்கி உள்ளதாக, தெளிவான விளக்கங்களுடன் சீன பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இரு நாடுகளிடையேயான இந்த நேரடி போட்டியால் சோய்உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது. சீன சோய்பீன் விநியோகஸ்தர்களையும் இது கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது என்று சர்வதேச வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.
தொடர்பு செய்திகள் : ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் மலேசியா பிரதமர் கைது