சென்னையில் பேருந்து கட்டணம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டதன் எதிரொலியாக ரயில்வே துறைக்கு ஒரே வாரத்தில் ரூ.2 கோடி அளவிற்கு வருவாய் கிடைத்திருக்கிறது.

Special Correspondent

சென்னை புறநகர் ரயிலில் ஜனவரி 20 முதல் 26ம் தேதி வரை மட்டும் ரூ.7.95 லட்சம் பயணிகள் கூடுதலாக பயணம் செய்தனர். இதன் மூலம் ரூ.1.96 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கிறதாக தெற்கு ரயில்வே தெரிவித்தது.

6 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜனவரி 19ம் தேதி பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது. இதனால் மக்கள் மாற்று போக்குவரத்தான ரயில் வண்டிக்கு மாறினர். குறிப்பாக மின்சார ரயில், மெட்ரோ ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

இதனால் பேருந்துகள் மூலம் தமிழக அரசுக்கு வரவேண்டிய வருமானம், ரயில்களின் வடிவத்தில் மத்திய அரசுக்கு சென்று கொண்டிருக்கிறது.