அரசை நம்பும் மக்களை அதிகம் கொண்ட உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருந்து 2018ல் 3வது இடத்துக்கு சரிந்துள்ளது.

Special Correspondent

சர்வதேச நம்பிக்கை கழகம் டாவோசில் வெளியிட்ட அரசை நம்பும் மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் 68 புள்ளிகளுடன் இந்தியா 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

முதல் இடத்தில் 74 புள்ளிகளுடன் சீனாவும், (கடந்த ஆண்டு 67 புள்ளிகளுடன் 3வது இடம்) இந்தோனேசியா 71 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் (69 புள்ளிகளுடன் கடந்த ஆண்டும் 2வது இடம்) இந்தியா 68 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் (72 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்தது), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 66 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் (கடந்த ஆண்டு 60 புள்ளிகளுடன் 5வது இடம்) சிங்கப்பூர் 58 புள்ளிகளுடன் 5வது இடத்தில் (60 புள்ளிகளுடன் கடந்த ஆண்டு 4ம் இடம்) உள்ளன.

இந்த பட்டியலில் சுமார் 7 புள்ளிகளை அதிகம் பெற்று சீனா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்க அரசின் மீதான மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பெரிய அளவில் சரிவடைந்துள்ளது. சுமார் -9 புள்ளிகள் சரிந்துள்ளது.

பணமதிப்பிழக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை போன்ற கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்த காரணத்தால் 3வது இடத்துக்கு சரிந்துள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளார்கள் .