பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களில் அவருடன் சென்றவர்கள் பற்றிய விவரங்களை அளிக்கும்படி பிரதமர் அலுவலகத்திற்கு தலைமை தகவல் ஆணையர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி வெளிநாடு சென்ற போது அவருடன் சென்ற தனியார் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள், தனியார் நிறுவனங்களின் அதிபர்கள் குறித்த விவரங்களை அளிக்குமாறு கடந்த வருடம் ஜூலை 2017 ல் நீரஜ் சர்மா என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும் அயுப் அலி என்பவர் கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம், மோடியின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு ஆகும் செலவு மற்றும் அவரை சந்திப்பதற்கான நடைமுறைகள், வீட்டிலும், அலுவலகத்திலும் பிரதமர் எத்தனை முறை பொது மக்களை சந்தித்துள்ளார் மற்றும் பொது கூட்டங்களில் கலந்து கொண்டு பேசியது மற்றும் இதற்காக அரசு செலவு செய்தது குறித்த தகவல்களை அளிக்குமாறு பிரதமர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நீரஜ் சர்மாவும், நீரஜ் சர்மாயும் தாங்கள் கேட்ட தகவலுக்கு பிரதமர் அலுவலகம் உரிய பதில் அளிக்கவில்லை எனக்கூறி இருவரும் தலைமை தகவல் ஆணையர் முன்பு முறையிட்டனர்.
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தின் போது அவருடன் சென்ற நபர்களை் பற்றிய விவரத்தை பாதுகாப்பு காரணங்களுக்காக தர முடியாது எனவும் இதற்காக தகவல் அறியும் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் கூறியதாக நீரஜ் சர்மா தெரிவித்தார்.
இதனையடுத்து பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூறும்போது, பிரதமரின் பயணம் குறித்த தகவல்கள் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் பிரதமர் மோடியுடன் சென்ற நபர்களை பற்றிய விவரங்களை பாதுகாப்பு முன்னிட்டு தெரிவிக்க முடியாது என கூறியுள்ளனர்.
இந்த தகவலை ஏற்க மறுத்த தலைமை தகவல் ஆணையர் ஆர்கே மாத்தூர் பிரதமர் மோடியுடன் சென்றவர்கள் பற்றிய விவரத்தை வெளியிட வேண்டும் என்றும் அதேநேரத்தில், பிரதமருடன் சென்ற பாதுகாவலர்கள் மற்றும் பாதுகாப்புதுறை சார்ந்த அதிகாரிகளின் விவரங்களை வெளியிட தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் பிரதமரின் வெளிநாட்டு பயணத்தின் போது அவருடன் சென்றவர்களின் பெயர்கள் மற்றும் பட்டியல் மற்றும் விவரங்களை விண்ணப்பதாரர்களிடம் 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலக மத்திய தகவல் ஆணையர் கூறுகையில் பிரதமரின் வெளிநாட்டு பயணம் குறித்த வரவு செலவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதனை விண்ணப்பதாரரர் பார்த்து கொள்ளலாம். மேலும் பொது கூட்டங்களுக்கு ஆன செலவு குறித்த தகவல் தங்களிடம் இல்லை என்று கூறியுள்ளனர்.
எதிர்கட்சிகள் மோடிஉடன் அவரின் நண்பர் அதானி அதிகமுறை வெளி நாட்டு பயணம் சென்றதாக குற்றம் சாட்டிய நிலையில் தலைமை தகவல் ஆணையர் அதிரடி உத்தரவு பரபரப்பை எற்படுத்தி உள்ளாதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர் .