சுவிட்சர்லாந்தின் டாவோஸில் உலகப் பொருளாதார மாநாடு நேற்று நடைபெற்றது. 1997-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக இருந்த தேவே கவுடா அப்போது நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்றார்.
20 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இம்மாநாட்டில் பங்கேற்றார். இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் தொழில் கட்டமைப்பு குறித்தும் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாகவும் உரையாற்றினார். அப்போது 2014 லோக்சபா தேர்தலில் 600 கோடி வாக்காளர்கள் தமக்கு வாக்களித்தனர் என பிரதமர் மோடி குறிப்பிட்டுவிட்டார்.
இந்திய தேர்தலில் 2014 அன்று 84 கோடி இந்திய வக்காளார்கள் இருந்த நிலையில் சுமார் 54 கோடி இந்திய வக்காளார்கள் வக்களித்த நிலையில் அதில் பஜக 171,660,230 வாக்குகள் பெற்று 282 இடங்களை கைபற்றியது.
106,935,942 வாக்குகள் பெற்றும் காங்ரெஸ் 44 இடங்களை மட்டுமே கைபற்றியது.
17 கோடி வாக்குகள் மட்டுமே பெற்றும், இந்தியாவின் 600 கோடி பேர் தமக்கு வாக்களித்ததாக டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
உலக மக்கள் தொகையே சுமார் 740 கோடிகள் என்பதும் குறிப்பிடதக்கது... இதனை அறியாமல் பஜக எம்பி நடத்தும் ரிபப்லிக் நடத்தும் டிவி இதனை பெருமையுடன் 600 கோடி பேர் மோடிக்கு வாக்களித்ததாக என்று கூறியுள்ளது இப்போது சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.