குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்ற கருத்து தவறு என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணை மந்திரி சத்யபால் சிங் கூறியிருந்த நிலையில், இது போன்ற பேச்சுகளை தவிர்க்க வேண்டும் என மூத்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவுறுத்தியுள்ளார்.

Special Correspondent

அறிவியல் உண்மைகளை சிதைக்கும் வகையில் நாம் பேசக்கூடாது என சத்யபால் சிங்கிற்கு கண்டித்து அறிவுறுத்தல் வழங்கியதாக ஜவடேகர் தெரிவித்தார்.

குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நம்முடைய மூதாதையர்கள் யாரும் இந்தக் கருத்தை எழுதவும் இல்லை. வாய்வழி வார்த்தையாகக் கூட சொன்னது இல்லை.

பூமி உருவான காலத்தில் இருந்தே மனிதன் மனிதனாகத்தான் இருந்தான். டார்வினின் இந்த கோட்பாடு அறிவியல் பூர்வமாகவே தவறானது. இதை பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கடந்த வாரம் பேசி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிபிட்டதக்கது.