ஆண்டாள் குறித்து வைரமுத்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இதனை கண்டித்து இந்து அமைப்புக்கள் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்தின. வைரமுத்து மீது விருதுநகர் மற்றும் சென்னையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தரக்குறைவாக வைரமுத்துவை விமர்சித்த பிஜேபி பொது செயலர் ராஜா மற்றும் வைரமுத்து நாக்கை வெட்டினால் 10 கோடி என்று கூறிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஆக இருந்து பிஜேபி தாவி பிஜேபி துணை பொது செயலர் ஆகிய நயினார் நாகேந்திரன் கூறிய நிலையில் அதன் மீது திருவண்ணாமலை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த புகார் இன்னமும் ஏற்கப்படாமல் உள்ளது.
ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்த வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் இன்றுடன் (ஜன.,18) இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
ஆனால் அவரின் முயற்சிக்கு ஹிந்து மக்கள் ஆதரவு தராத விரக்தியில் அவருடன் அவர் சாதி முக்கிய பிரமுகர்கள் ஜீயருடன் பேச்சு நடத்தினர். இதனையடுத்து ஜீயர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.
மேலும் வைரமுத்து வரும் பிப் 3 ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க தவறினால் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் ஜீயர் கூறியுள்ளார்.
இந்நிலையில் வைரமுத்துவுக்கு எதிராக, 'வாழ்க இந்து நீதி தர்மம்' எனும் தலைப்பில் ஜீயர்கள், மடாதிபதிகள், சிவாச்சாரியார்கள், இந்து அமைப்புகள், ஆன்மிக நல விரும்பிகள் பங்கேற்ற கூட்டம், சென்னை, அரசு விருந்தினர் மாளிகை அருகே நேற்று நடந்தது. அதில் வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் மெரீனாவில் மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கப்பட்டது.
ஆனால் சமூக வலை வளத்தில் பல்வேறு பிற மெஜாரிட்டி ஹிந்து இளைஞர்கள் ஆண்டாள் சந்நிதிக்கு எங்களை உள்ளே அனுப்பினால் போராட்டத்துக்கு ஆதரவு தரலாம் என்று பதிவிட்டு வருகின்றனர்.
இன்னும் சிலர் ஜல்லிக்கட்டு காவேரி முல்லைப்பெரியாறு மீத்தேன் அனிதா தமிழ் மாணவர்கள் டெல்லியில் மர்மச்சாவு மீனவர்கள் பிரச்சனை கீழடியில் அகழ்வாராச்சி செய்ய மோடி அரசு செய்யும் முட்டுக்கட்டை உள்ளிட்ட பிரச்சனையில் ஜீயர் போராட்டம் செய்தாரா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் நடராஜன் கோவில் சீர்காழியில் தமிழில் அர்ச்சனை செய்ய ஏன் அர்ச்சகர்கள் மறுத்து வருகின்றனர் என்று கேட்டும் உள்ளனர்
பிரச்சனை வேறு திசையில் செல்வதை கண்ட பிஜேபி ஆர்எஸ்எஸ் ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் இதனை வளர்க்க வேண்டாம் என்று ஜீயருக்கு அறிவுறுத்தி இருப்பதாக மடத்து செய்திகள் கசிகிறது.