காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற பிறகு தனது நாடாளுமன்ற தொகுதியான அமேதிக்கு முதல் முறையாக ராகுல் காந்தி வருகை தர உள்ளார்.

Special Correspondent

அவரது வருகையை முன்னிட்டு, அமேதி முழுவதும் விதவிதமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், பத்து தலைகளுடன் ராவணன் வடிவில் மோடியின் புகைப்படமும், அவரை வதம் செய்யும் ராமனாக ராகுல் புகைப்படமும் இடம்பெற்றிருக்கும் ஒரு போஸ்டர் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில், ராகுல் காந்தி, பாஜகவின் அரக்க ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் ராம ராஜ்ஜியத்தை அமைப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இதனை உள்ளூர் காங்கிரஸ் தலைவர் அபய் ஷுக்லா அச்சடித்து ஒட்டியுள்ளார்.

இது குறித்து மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூறுகையில், இது கட்சியின் அதிகாரப்பூர்வ போஸ்டர் அல்ல என்றும், அப்படியே இருந்தாலும் அதில் ஆட்சேபனைக்குரிய விஷயம் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. தாங்கள் வாக்களித்த தலைவரை வரவேற்க தொண்டர்கள் தங்களுக்கென ஒரு பாணியை பின்பற்றுகிறார்கள் என்றார்.

இந்நிலையில், போஸ்டர் தொடர்பாக பாஜகவை சேர்ந்த சூர்ய பிரகாஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில், அமேதியில் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ராம ஷங்கர் சுக்லா மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.