சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடைபெற்ற துக்ளக் இதழின் 48வது ஆண்டு விழாவில் , ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என்றும்,
தமிழகத்தில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் வளர வேண்டும் என்றால், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க கூடாது என்று மகாத்மா காந்தி கொன்ற நாதுராம் கோட்ஸே வழி பின்பற்றும் ஆர் எஸ் எஸ் கொள்கை வழி செயல்படும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தனது ஆசையை வெளிப்படுத்தினார்...
இந்நிலையில் நாடக ஆசிரியர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்ட ஞாநி சங்கரன்(63) உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை சென்னையில் காலமானார் . அவரின் கடைசி முகநூல் பதிவில், துக்ளக் ஆண்டு விழா வீடியோ கொஞ்ச நேரம் பார்த்தேன். குருமூர்த்தி பகிரங்கமாக பாஜக நிலை எடுக்கிறார். சோ இவ்வளவு பகிரங்கமாக செய்ய மாட்டார். பாஜகவையும் லேசாக கிண்டல் செய்வார். குருமூர்த்தி முழுக்க முழுக்க பாஜத சங்கப் பரிவாரத்தின் குரலாகவே ஒலிக்கிறார். இப்படி வெளிப்படையாக இருப்பது வரவேற்கத் தக்கது. முழுக்க அம்பலமானால்தான் மக்களுக்குப் புரியும். எத்தனை நிதர்சனமான உண்மை என்று பதிவிட்டுள்ளார்.
ஞாநியின் உடலுக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என அரசியல் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த், ஞாநி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் ரஜினி கூறிகையில், “எழுத்தாளர் ஞாநியின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஞாநி எனது நண்பர், நான் அவரது ரசிகன் "தனக்கு சரியென தோன்றுவதை பயமின்றி பேசவும் எழுதவும் கூடியவர்” என்று தெரிவித்தார்.
குருமூர்த்தி ரஜினியை தாஜா செய்ய, இது சம்பதமாக குருமூர்த்தின் தரத்தை கேள்வி எழுப்பிய ஞானியின் மரணம் செய்யும் முன் செய்த கடைசி பதிவு மற்றும் ரஜினி ஞாநிக்கு செலுத்தும் மரியாதை என்பது,
முதல்வர் துணைமுதல்வர் இருவருக்கும் ஆண்மை அற்றவர்கள் என்று கூறிய குருமூர்த்தி அரசியல் அணுமுறையை கேலி கூத்தாகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.