இந்திய தேர்தல் தலைமை ஆணையராகப் பணியாற்றி முக்கிய சீர்திருத்தங்களை தேர்தல் முறையில் கொண்டு வந்த டி.என்.சேஷன். சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் தமது மனைவியுடன் வசித்து வருகிறார்.

Special Correspondent

டி.என். சேஷன் (திருநெல்லை நாராயண அய்யர் சேஷன்) இந்திய ஆட்சிப் பணி அலுவலராக இந்திய அரசின் பல்வேறு அரசுப் பொறுப்புக்களை வகித்து ஓய்வு பெற்றவர். இந்தியாவின் 10வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக 1990 முதல் 1996 வரை பொறுப்பேற்றவர். தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது எடுத்த அதிரடி நடவடிக்கைகள் பல. இவரது சில நடவடிக்கைகள் பலத்த விமர்சனத்துக்கு உள்ளானபோதிலும் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு சீர்திருத்தங்களை செய்தது, தேர்தல் தில்லுமுல்லுகளை கட்டுப்படுத்த எடுத்த முனைப்பான நடவடிக்கைகளால் பெரிதும் அறியப்பட்டவர். மிகக் கடுமையாக தேர்தல் ஆணைய விதிகளை அமல்படுத்தி அரசியல்வாதிகளுக்கு எதிரியானார். இவரது நடவடிக்கை யால் பெரிதும் பாதிக்கப்பட்ட அன்றைய தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா வின் கட்சியினர் இவரை தாஜ் ஹோட்டல் இல் வைத்து தாக்க முற்பட்ட போது அது பரபரப்பாக அப்போது பேச பட்டது .

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேலையில் பிரமாண்டமாக நடந்தது முதல் முதலில் கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் தான் இதனை செய்ய தடையாக இருந்து அதிமுகவினருக்கு சிம்ம சொப்பனமாக மாறினார் சேஷன் .இவரது காலத்திலே (1996) அதிமுக வரலாறு காணாத விதமாக வெறும் 7% வாக்குகளை மட்டுமே பெற்று பாராளுமன்ற தேர்தலில் படு தோல்வி அடைந்தது .

பாலக்காட்டை சேர்ந்தவரான சேஷனுக்கு சொந்த ஊரில் வீடு இருந்தாலும், வயோதிக காலத்தில் கவனித்துக் கொள்ள பிள்ளைகள் இல்லாததாலும், தன் வயதையொத்தவர்களுடன் சேர்ந்து வாழ் விரும்பியே முதியோர் இல்லத்தை நாடிச் சென்றதாக கூறப்படுகிறது. அண்மையில் குருகுலம் முதியோர் இல்லத்தில் சேஷன் தமது 85 வது பிறந்தநாளைக் தனிமையுடன் கொண்டாடினார். இவரை இவரது உறவினர்களே ஒதுக்கி விட்ட நிலையில் மிகவும் வருத்தமுடன் இருப்பதாக அவரின் குருகுலம் சக வாசிகள் தெரிவித்தனர்

கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் உதவி ஆட்சியர், மதுரை மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து துறை இயக்குநர், வேளாண், தொழில்துறைச் செயலர், என தமிழகத்தில் பல்வேறு பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.