சென்னையில் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கான நிதி திரட்டுவதற்காக, நடிகர் சங்கத்தின் சார்பில் மலேசியாவில் நட்சத்திர விழா நடைபெற்றது.

Special Correspondent

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன், விஷால் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். விழா நடுவில் நடிகர் ரஜினிகாந்த் மேடையேற, அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு சுவாரஸ்சியமான தகவல்களை பதில்களாக தெரிவித்துள்ளார்.

அப்போது தன் முதல் காதல் பற்றி பேசியுள்ள நடிகர் ரஜினிகாந்த், ‘நானும் காதலில் விழுந்திருக்கிறேன். கர்நாடகாவில் எனது பள்ளிக்காலத்தில் ஏற்பட்ட காதல் அது. என்னால் அதை மறக்கமுடியாது. எல்லோருடைய முதல் காதலும் அவர்களது இதயத்தில் பத்திரமாக இருக்கும். எத்தனையோ பேர் அவர்களது முதல் காதலில் ஜெயித்திருப்பார்கள். ஆனால், எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. என் முதல் காதலில் தோற்றுவிட்டேன்’ என உருக்கமாக பேசியுள்ளார். ஆனால், எவ்வளவு கேட்டும் அந்தப் பெண்ணின் பெயரை ரஜினிகாந்த் சொல்ல மறுத்துவிட்டார்.

1996ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு இருந்தும், அதைத் தவறவிட்டதை எண்ணி என்றைக்காவது வருந்தியிருக்கிறீர்களா? என்ற நடிகர் விவேக்கின் கேள்விக்கு, ‘அதை எண்ணி ஒரு நொடி கூட நான் வருந்தியதேயில்லை’ என பதிலளித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.