ஜனவரி 4ம் தேதி 58 ஆயிரம் டன் மணல் மலேசியாவிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது
இறக்குமதி மணலை விற்பனை செய்ய தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இறக்குமதி மணலை கையாளவும், விற்கவும் மாநில அரசுக்கே உரிமை என்று அரசாணை வெளியிடப்பட்டது.
இறக்குமதி செய்யப்பட்ட மணலை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அரசே விலை நிர்ணயிக்கும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ந்த போன இறக்குமதியாளர் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை தூத்துக்குடியிலிருந்து மங்களூருவுக்கு கொண்டு செல்ல நிலைக்கு தள்ளப்பட்டார்.
மோடி அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கண்டவுடன் சரிய தொடங்கிய கட்டுமான தொழில் துறை எழவே இல்லை .இந்த நிலையில் கட்டுமான தொழில் அதிபர்கள் இறக்குமதி செய்யப்பட்ட மணல் தமிழக ஆற்று மணலை விட குறைந்த விலைக்கு வருவதால் அதனை கொள்முதல் செய்து தொழில் அபிவிருத்தி செய்யலாம் என்ற நிலையில் அதிமுக அரசின் இந்த செயலை கண்டு அதிர்ந்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன