தன்னுடன் இருக்கும் சிலரை ஸ்டாலின் தவிர்க்க வேண்டும். அது, எ.வ.வேலுவாக இருக்கட்டும்; சபரீசனாக இருக்கட்டும்; சேகர் பாபுவாக இருக்கட்டும். இவர்களிடம் என்ன பேச வேண்டுமோ பேசி முடித்துவிட்டு, வெளியில் அனுப்பிவிட வேண்டும் என்று M.K.Stalin க்கு அறிவுரை வழங்கி உள்ளதே விகடன்...
விகடன் மீடியாவில் பெரிய நிறுவனம்... செய்திகளை முந்தி வேகமாக தரும் எல்லா கட்டமைப்பு வசதிகளை தரும் முக்கிய முன்னனி நம்பர் ஒன் ஜாம்பவான்...
"ஏகாம்பரேஸ்வரர் சிலை தங்கம் திருட்டு கண்டுகொள்ளாத லோக்கல் போலீஸ் - நீதிமன்றம் அதிரடி" என்று சென்ற ஆண்டிலே ஆரம்பிக்கப்பட்ட வெறும் 6 பேர் கொண்ட டீம், ஒரு லட்சம் வாசிப்புகளை கொண்ட செய்தி portal www.splco.me 11/12/2017 அன்றே விலாவரியாக லோக்கல் போலீசில் அர்ச்சகர் கூட்டு சதி நீதிமன்றம் உத்தரவை மேற்கோள் காட்டி வெளியிட்டது.
அதே செய்தியை ஆயிரக்கண்ணில் டீம் வைத்துள்ள 50 வருட ஸ்தாபன மீடியா விகடன் சாவகாசமாக 03/01/2018சுமார் நாட்களை தாண்டி எப்படி வெளியிடுகிறது என்று பாருங்கள்
உச்சநீதிமன்றத்தாலே தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விஷயத்திலும்,
உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் படியே நடைபெற்ற கோர்ட் தீர்ப்பில் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட ராஜா கனிமொழி விடுவிக்க பட்ட விஷயத்தில் இரு வேறு நிலைகளை தினமலர் குமுதம் Frontline உள்ளிட்ட ஒரு பிரிவு பத்திரிகைகள் "திகிலில் கருணாநிதி, கதறும் கருணாநிதி குடும்பம், கிலியில் திமுக " என்றெல்லாம் எப்படி எப்படி உணர்ச்சிவசப்பட்டு தலைப்பு செய்தி வாசித்தது என்பது ஊரும் உலகமும் அறிந்ததே...
கோவில் அர்ச்சகர் சம்பத்தப்பட்ட சிலை திருட்டு என்ற நெருடல் காரணமாக இங்கே ஜாதி பாசம் விகடன் கண்ணை மறைக்கிறது என்றெல்லாம் நீங்கள் தரப்போகும் பின்னுட்டத்தின் உண்மையை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவோம்...
ஆனாலும் விகடன் தினமலர் போன்ற ஜாம்பவான்கள் கடந்து நாப்பது ஆண்டு ஆட்சியிலே வெறும் 12 வருடம் மட்டுமே ஆட்சி செய்த ஏன் திமுக வை குறி வைத்து குதற வேண்டும்,
முக்கியமாக ஸ்டாலின் எப்படி பல் விளக்க வேண்டும்... எந்த ப்ருஷ் எதனை முறை எந்த வாட்டி அவர் எந்த அழுத்தத்தில் கொடுக்க வேண்டும்... அதை துப்பும் போது மென்மையாக வாஷ் பேசின் வலிக்காமல் எப்படி துப்ப வேண்டும்...
என்றெல்லாம் ஒரு குறிப்பிட்ட வகை மீடியா Rangaraj Pandey , Sumanth Raman Gnani Sankaran, மாலன் etc., நிபுணர்கள் ஏன் தொடர்ந்து அறிவுரை சொல்ல வேண்டும்... இதன் காரணம் தெரிந்தால் நாமும் கேட்டு அறிவு பெற்று மேன்மை அடைவோமே...