இந்தியாவில் மோடி பணமதிப்பிழப்பு தொடர்ந்து ஐ டீ நிறுவனங்கள் பலரை வேளையில் இருந்து தூக்கி வரும் நிலையில் இது சம்பந்தமாக வெரிஸ்ன் நிறுவனம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த விதம் பலத்த சர்ச்சை கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது https://www.splco.me/tamil/1mseidhigal/Dec17/151217ta2.html
அடுத்த இடி ஐடி ஊழியர்கள் தலையில் விழ உள்ளது.
அமெரிக்காவில் பணியாற்றும் 5 லட்சம் இந்தியர்களை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி வெளிநாட்டவரின் தொழில் விசாக்களை நீட்டிக்க முடியாது என்று டிரம்ப் அரசு கெடுபிடி காட்டி வருவதால், கணினித்துறையில் பணிபுரியும் சுமார் 5 லட்சம் இந்தியர்கள் வேலைவாய்ப்பை இழந்து தாய்நாட்டுக்கு திரும்பக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
தற்போதுள்ள நடைமுறைப்படி, விசா நீடிப்பின்மூலம் 6 ஆண்டுகளுக்கு அவர்கள் பணியில் நீடிக்க முடியும். அதற்குள் கிரீன் கார்டு என்ற குடியுரிமையைப் பெற்றுவிட்டால் காலவரம்பின்றி அவருடைய விசா நீட்டிக்கப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.