ரஜினிகாந்த் அரசியலில் குதித்து விரைவில் அரசியல் கட்சி துவங்கவுள்ளதாக அறிவித்தது தான் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் உள்ள அனைத்து ஊடகங்களின் ஹெட்லைன் நியூஸ்.
ரஜினிக்கு ஆதரவாக எதிராக சமூக வலைத்தளங்களில் பல்வேறுபட்ட கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன் போன்ற படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் "என்னால் உங்களுக்கு வாக்களிக்க முடியாது" என வெளிப்படையாகவே முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது...
"அன்புடன் ரஜினிகாந்த் SIRக்கு., வணக்கம். நான் உங்களின் தீவிர ரசிகன். அதை என் முதல் படைப்பிலேயே பதிவு செய்தவன். ஆனால் ஒரு வாக்காளனாக, ஒரு தமிழனாக, என்னால் உங்களுக்கு வாக்களிக்க முடியாது.
இனி ஒரு விதி செய்வோம்... அது யாதனின்- இனி நம் தமிழ் மண்ணை ஒரு தமிழனே ஆள வேண்டும்.
ஆனால் தமிழ் திரை உலகில், நீங்கள்தான் என்றும் எங்களின் SUPER STAR நன்றி, என்றும் அன்புடன் எஸ்.ஆர். பிரபாகரன் - திரைப்பட இயக்குனர்".
இந்நிலையில் ரஜினிகாந்திற்கு எதிராக இயக்குனர் கவுதமன் சவால் விட்டுள்ளார். "ரஜினிகாந்த் ஒரு துக்க செய்தியை தமிழ் இனத்துக்கு புத்தாண்டு பரிசாக கொடுத்திருக்கிறார். தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படும் போது களத்தில் நின்று போராடியிருக்கிறாரா" என கவுதமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
"அவர் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அந்த தொகுதியில் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்" என ரஜினிகாந்திற்கு நேரடியாகவே பிரபல இயக்குனர் விக்ரமன் சவால் விட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.