அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட வட கொரிய ரகசியமாக ஆறுமுறை அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டுள்ளது.

Special Correspondent

நவம்பர் மாதம் வடகொரியா சோதனை நடத்திய ஹுவாசாங் 15 என்னும் ஏவுகணை 4,475 கி.மீ உயரம் செல்லக்கூடியது.

பொருளாதார தடைதொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபடும் வட கொரியா மீது பல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.

இந்த நிலையில் தொலைக்காட்சி மூலம் மக்களிடம் கிம் ஆற்றிய புத்தாண்டு உரையில், அமெரிக்கா வட கொரியாவின் அணு ஆயுத தாக்குதல் வரம்பிற்குள்தான் உள்ளது என்றார்.

மேலும் அவர், `இது மிரட்டல் இல்லை. இது உண்மைநிலை` என்றும் தெரிவித்தார். அதே நேரம் தென் கொரியாவுக்கு நட்புக்கரம் நீட்டியுள்ளார்." நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்" என்று தென்கொரியாவுக்கு சமிக்ஞை அனுப்பியுள்ளார்.

தொலைக்காட்சி உரையில் தனது அணு ஆயுத பார்வையை மீண்டும் வலியுறுத்தி பேசினார். அணு ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பெருமளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்றும், அவற்றை விரைவில் படைகளின் பயன்பாட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதே நேரம், வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்குமான உறவில் உள்ள இறுக்கங்கள் வரும் ஆண்டுகளில் குறைய வேண்டும் என்று தனது விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இது முக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த 2018 ஆம் ஆண்டு, வட கொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் மிக முக்கியமான ஆண்டு. வட கொரியா தனது 70 வயது பிறந்த தினத்தை கொண்டாடப் போகிறது, தென் கொரியா குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்தப் போகிறது. இதற்கு தனது அணியை அனுப்புவது குறித்து வடகொரியா பரிசீலிக்கும் என்று கிம் தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தம் நாட்டிலிருந்து ஓர் அணியை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

வட கொரிய அதிபரின் இந்த மிரட்டல் குறித்து டிரம்பிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, டிரம்ப், "பார்க்கலாம், பார்க்கலாம்" என்றார்.