முத்தலாக் மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அகில இந்திய முஸ்லீம் லீக் அறிவித்துள்ளது. கொச்சியில் பேசிய அக்கட்சி தலைவர் குஞ்ஞாலி குட்டி குடும்ப பிரச்சனையை கிரிமினல் குற்றமாக மாற்றுவது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது என்று குற்றம்சாட்டினார்.

Special Correspondent

முத்தலாக் குற்றம் புரிந்த முஸ்லீம் ஆணை 3 ஆண்டுகள் சிறையில் அடைத்தால் அவரது மனைவி, குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆவது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

முத்தலாக் மசோதாவில் பல்வேறு முக்கிய அம்சங்கள் விடுப்பட்டிருப்பதாகவும் அடிப்படைக் கேள்விகள் பலவற்றிற்கு மசோதாவில் பதிலில்லை என்றும் பி.கே.குஞ்ஞாலி குட்டி விமர்சித்தார்.

முஸ்லீம் தனிநபர் சட்டத்தை மறுதளித்து பொதுசிவில் சட்டத்தை கொண்டு வரும் முயற்சி இது என்று வர்ணித்துள்ள பி.கே.குஞ்ஞாலி குட்டி முத்தலாக் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறினால் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அகில இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்படும் என்று திட்டவட்டமாக கூறினார்.

இந்த நிலையில் இன்று மன்கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி "தனியாக ஹஜ் பயணம் செல்வதற்கு அனுமதி கேட்டு 1,300 முஸ்லிம் பெண்கள் விண்ணப்பித்துள்ளதை கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இவர்கள் அனைவருக்கும் அனுமதி அளிக்கும்படி மத்திய சிறுபான்மை அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளேன். வழக்கமாக, ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பம் செய்தவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால், இப்பெண்களுக்கு அதில் இருந்து விலக்கு அளிக்கும்படியும், அவர்களை சிறப்பு பிரிவில் அனுமதிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளேன் " என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்தாலும் பிஜேபி மற்றும் ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட இந்து அமைப்பினர் அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்லுவதை ஏன் மறுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்து வழக்கினை புனிதம் கேட்டு விடும் என்ற போர்வையில் தொடர்ந்து எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.