சிரியாவின் தற்போது நடைபெறும் முஸ்லிம் இனகுழு தீவிரவாதம் போல வேறு மதத்தில் உண்டா...
வைணவர்களும் சைவர்களும் 8~10 நூற்றாண்டில் சிரியா முஸ்லிம் மதக்குழு போல மோதி கொண்டதாக நயன்மார்கள் ஆழ்வார்கள் வரலாறு சொல்கிறது...
சிரியாவை விட மோசமாக ஏழாம் நூற்றாண்டில் மதுரை வட்டத்திலே சுமார் 8000 ஜைன் மதத்தினரை சிவனை கும்பிடும் சைவ மதத்தினர் கொடுரமாக கழுவேற்றி கொன்று உள்ளனர்.
சமணர் கழுவேற்றம் என்பது நின்ற சீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வு: சமணர்களை நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் என்று பெரியபுராணம் நூலில் உள்ள குறிப்புகள் மூலமாக அறிய முடிகிறது.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், அந்தணர் மரபிலே, கவுணியர் குடும்பத்தில் சம்பந்தர் பிறந்தார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
ஞானசம்பந்தரால் சைவ சமயத்தை மீண்டும் தழுவிய பாண்டிய மன்னன் சைவ சமயத்தைத் தழுவ மறுத்த எண்ணாயிரம் சமணர்களை மதுரை அருகே உள்ள சாமணத்தம் என்னும் இடத்தில் கழுவேற்றினான் என்று சொல்லப்படுகிறது.
கழுவேற்றம் (impalement) என்பது ஒரு மரணதண்டனை முறையாகும். கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றுவர்.
அதற்குமுன் கழுமரத்தில் எண்ணெய் தடவி கழுவேற்றப்படுபவனை பிடித்து நிர்வாணமாக்கி, அவனை குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயை கழுமுனையில் வைத்து அப்படியே செருகி விடுவார்கள். உடலின் எடையால், எண்ணைதடவிய கூர்மையில் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கழு மெதுவாக உடலை துளைத்துக் கொண்டு மேலேறும்.
கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேற ஏற வலி தாங்காமல் இரவெல்லாம் கூப்பாடு போட்டு மடிந்து போவார்க்ள்.
சாதாரணமாக இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து புதைப்பார்கள். அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுமரம் ஏற்றப்பட்டவர்களுக்கு இது கிடையாது.
கழுவிலேற்றப்பட்ட உடல் பறவைகளுக்கும்,நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும். கழுமரம் பெரும்பாலும் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். அதனால்தான் அதனைக் கழுமரம் என்று குறிப்பிட்டனர். இரும்புக் கழுவும் இருந்தது. இந்த இரும்புக் கழுமரத்தை வெங்கழு என்று குறிப்பிட்டனர். இந்த வெங்கழு தமிழகத்தில் ஈரோடு காளிங்கராயன் கால்வாய்க்கு அருகில் உள்ள 'அய்யனாரப்பன் கோவிலில்' இன்றும் உள்ளது.
தனது சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எனும் நூலில் திரு.வி.க போதிய அகச்சான்றும் புறச்சான்றும் இல்லாததால் சமணர் கழுவேற்றத்தைத் தான் ஏற்றுக்கொள்ள முடியாதெனக் கூறியுள்ளார்.
முனைவர் கொடுமுடி ச. சண்முகன் தான் எழுதிய எண்ணாயிரம் என்ற நூலில் எண்ணாயிரம் சமணர் என்பது சில சமணர்களை கொண்ட குழுவே என்றும் எழுதியுள்ளார்.
"எண்ணாயிரம்" சமணர் என்ற பெயர் சுட்டில் சமணர்களின் முன்னொட்டு பெயராக வரும் எண்ணாயிரம் என்பது 8000 சமணர்களை குறிக்கிறதா அல்லது எண்ணாயிரம் என்ற ஊரில் வாழ்ந்த சமணர்களின் குழுவைக் குறிக்கிறதா என்பதில் அறிஞர்களிடம் மாற்றுக்கருத்துகள் உண்டு.
ஆனால் சமணரைக் கழுவேற்றிய படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 63ஆவது படலமாகும். இப்படலம் பாண்டியன் சுரம் தீர்த்த படலம் என்பதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.
இப்படலத்தில் பாண்டிய மன்னனின் சுரத்தினை திருஞானசம்பந்தர் தீர்த்தபின்பு நிகழந்தவைகளை குறிப்பிடப்பட்டுள்ளன. மன்னின் நோயைக் குணப்படுத்த முடியாத சமணர்கள் திருஞானசம்பந்தரை அனல் மற்றும் புனல் வாதத்திற்கு அழைப்பதும், அதில் தோற்றுப்போனால் தங்களை கழுவேற்றலாம் என வாக்குறிதி அளிப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளன.
மதுரையில் கூன்பாண்டியன் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் கொடுமைக்கான ஆதாரங்கள் என மூன்று சான்றுகளை அறிஞர்கள் வைக்கின்றனர்.
முதல் சான்று:
சுவரோவியங்களும் சிற்பங்களும். முதலில் சமணர்களைக் கழுவேற்றியதை அன்றைய ஆட்சியாளர்கள் வெற்றியாகவே கருதினர். அதனால்தான் அதுகுறித்த ஓவியங்களை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்தைச் சுற்றிலும் இருக்கும் சுவர் களில் தீட்டி வைத்துள்ளனர்.
இரண்டாவது சான்று:
கந்தர்சஷ்டி கவசங்களில் கொலைக்களத்துக்கு வெகு அருகில் இருக்கும் பழமுதிர்ச்சோலை கவசம் பாடிய தேவராயக் கவிராயர் ‘எண்ணாயிரம் சமணர்களை எதிர்கழுவேற்றி’ எனப் பாடுவார்.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் எழுதிய பெரிய புராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் திருஞான சம்பந்தரின் கீர்த்தியாக இந்தக் கழுவேற்றத்தைப் பற்றிப் பேசுகிறது.அதில் மதமாற்றம், அதாவது சமணத்திலிருந்து சைவத்துக்கு மாறும்படியான பாண்டி யனின் கட்டளையை ஏற்காத எண்ணாயிரம் சமணர்கள் ஆனைமலை மற்றும் இதர மலைகளிலிருந்து இறங்கிக் கழுவேறினர் என்கிறது.
ஞானியான சம்பந்தர் சைவ மடங்களின் நலனுக்காகவே இந்தக் கழுவேற்றத்தை நிறைவேற்றினார் என் கிறது. பெரும்பற்றப் புலியூர் நம்பி எழுதிய திருவிளையாடல் புராணமும், பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணமும் அதைப் பெருமிதமாகவே பேசுகின்றன.
மூன்றாவது சான்று:
வெகு மக்களின் சடங்குகள் வழியாகக் கைமாற்றப்படும் நினைவு வரலாறு. இது நாட்டார் பாடலாகவும் திருவிழாவின் பகுதியான சடங்காகவும் நிகழும். இன்று வரை மதுரை மேற்கில் இருக்கும் மேலக்காலில் இருந்து கிழக்கில் இருக்கும் திருப்புவனம் வரை சிவன் கோயில் விழாக்களின் பிரிக்க முடியாத அங்கமாக, கழுவேற்றம் என்னும் சடங்கு தவிர்க்க முடியாத வகையில் நிகழ்ந்துவருகிறது.
அது நிகழும் இடம் திருப்புவனத்தில் ‘கழுவேற்றப் பொட்டல்’என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. இன்னும் மிச்சமாகப் பல்வேறு திருவிழாக்களின் பகுதியான சடங்காக இன்று வரை கழுவேற்றம் என்பது ‘பெருமிதத்துடன்’ நிகழ்த்தப்படுகிறது.
மொத்தத்தில் தீவிரம் + வாதம் உடன் மதம் கலக்கும் போது அது தீவிரவாதம் ஆகிறது...
அதில் சிரியா என்ன... திருஞானசம்பந்தர் என்ன... பின்லேடன் என்ன ஞானப்பெண்ணே...
நீங்கள் செலவழித்த மணி துளிகளுக்கு நன்றி...
Data Complied by #Savera based on References
பெரியபுராணம் முலமும் உறையும் - மூன்றாம் பாகம், புலவர்.பி.ரா.நடராசன், உமா பதிப்பகம், சென்னை
சமணரைக் கழுவேற்றிய படலம் - பெரியபுராணம்
சேக்கிழார். பெரியபுராணம். பாடல் எண் - 2751.
John Cort (1998). Open Boundaries: Jain Communities and Culture in Indian History. SUNY Press.
Steven Paul Hopkins Associate Professor of Religion Swarthmore College in Pennsylvania.
Singing the Body of God : The Hymns of Vedantadesika in Their South Indian Tradition: Oxford University Press.