சீன தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு இரண்டே மணி நேரத்தில் செல்லும் அதிவேக ஹைபர் சோனிக் விமானத்தை சீனா தயாரித்துள்ளது. ,
தற்போது பெய்ஜிங் - நியூயார்க் இடையே 14 மணி நேரம் விமான பயணம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிவேகமாக செல்லக்கூடிய ஹைபர் சோனிக் விமான சோதனையை சீனா சமீபத்தில் நடத்தியது.
ஹைபர் சோனிக் விமானம் மணிக்கு 6 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. தற்போது நடத்தப்பட்ட சோதனையின் போது சீனாவின் ஹைபர் சோனிக் விமானம் மணிக்கு 8,600 கி.மீ. வேக திறனுடன் பறந்து சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் படி தற்போது பெய்ஜிங் - நியூயார்க் இடையே நடைபெற்று வரும் 14 மணி நேர விமானப் பயணமானது, 2 மணி நேரமாக குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் இந்த விமான பயணத்துக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். பெய்ஜிங் - நியூயார்க் செல்ல இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.