ஜெயலலிதாவின் மகள் என தன்னை அறிவிக்கக் கோரியும், தனக்கு மரபணு சோதனை செய்ய உத்தரவிடக் கோரியும், ஜெயலலிதாவுக்கு வைஷ்ணவ முறைப்படி இறுதி சடங்கு செய்ய கோரியும் உத்தரவிடுமாறு பெங்களுரு சேர்ந்த அம்ருதா என்பவர் உச்சநீதிமன்றதில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

Special Correspondent

அந்த மனுவை நிராகரித்த நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டில் உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினர். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் அம்ருதா மனு தாக்கல் செய்தார்.

அப்போது ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்தால் என்ன என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்க கோரிஅமுருதா தொடர்ந்த வழக்கில் அப்பலோ மருத்துவமனைக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. ஜெயலலிதாவின் உயிரியல் மாதிரிகள் மருத்துவமனையில் உள்ளதா என பதிலளிக்க கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.

பதில் மனு தாக்கல் செய்ய அரசு அவகாசம் கோரியதால் வழக்கு மார்ச் 7க்கு ஒத்திவைக்கப்பட்டது