சில தினங்களுக்கு முன், உலகில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்குப் பயிற்சி அளிக்கும் மையமாக தமிழகம் மாறிவருகிறது என்றும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதக் கும்பல்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது சர்ச்சையை உண்டாக்கியது. இதே கருத்தை ஆமோதித்து, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் பேசினார்.

Special Correspondent

இதற்கு பதில் அளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு ஜமுக்காளத்தில் வடி கட்டிய பொய் என்றும் தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது என்றும் பதிலடி கொடுத்தார்.

இதனால் கடுப்பான பாஜக பொது செயலளார் ராஜா ஷர்மா பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது உண்மை என்றும் ., இதனை மறுப்பவர்கள் புத்தி சுவாதினம் இல்லாதவர்கள் என்றும் கூறினார்.

குறிப்பாக, ஆளுங்கட்சியான அ.தி.மு.க - வுக்கும் தமிழக பா.ஜ.க-வுக்கும் இடையேயான மோதல் இந்த பேச்சு பார்க்கப்படுகிறது.

இதற்குப் பதிலடிகொடுக்கும் வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இதுகுறித்து சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மற்ற மாநிலங்களைக் காட்டிலும் இன்றைக்கு தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்பட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. உத்தரப்பிரதேசத்தை விட தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது' என்றார்.

முன்னர் ஆர்கேநகர் இடைதேர்தல் தோல்வி காரணமாக துக்ள்க் ஆசிரியர் அர்எஸ்எஸ் குருமுர்த்தி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆண்மையற்றவர்கள் என்று பேசியதும் அதற்கு அமைச்சர் ஜெயகுமார் குருமுர்த்தி நாவைஅடைக்கி பேச வேண்டும் என்று கூரியதும் சர்ச்சையை உண்டாக்கியது என்பதும் குறிப்பிடதக்கது.