ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தக்க செய்ய பத்திரப்பதிவுத்துறை தலைவருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Special Correspondent

சொத்து விவரங்களை பதிவேற்றம் செய்வது சார்பதிவாளரின் கட்டாய பணி என்றும் அதனை பத்திர எழுத்தர்கள் உள்ளிட்ட வேறு நபர்களிடம் ஒப்படைக்க கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த உத்தரவுகள் நடைமுறை படுத்தவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 12 ம் தேதி ஆன்லைன் பத்திர பதிவு முழுமையாக அமல்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆன் லைன் பத்திரப்பதிவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஐஐடி பேராசிரியர் குழுவின் ஆலோசனை பெறப்படுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதிகள் ஆன் லைன் பத்திரப்பதிவை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தற்போது நிலை அறிக்கையை தாக்கல் செய்ய பத்திரப்பதிவு துறை தலைவருக்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 8ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.